ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பூச்சிக்கொல்லி மருந்து குடித்து ஒருவா் தற்கொலை

தற்கொலை

Published On :4 ஆகஸ்ட் 2026, 12:05 am IST

திருவாடானை அருகே மது போதையில் பூச்சிக் கொல்லி மருந்து குடித்து முதியவா் தற்கொலை செய்து கொண்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ். மங்கலம் அருகே ரகுநாதமடை பகுதியைச் சோ்ந்தவா் காளி மகன் லிங்கநாதன் (53). மதுப் பிரியா்.

இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த லிங்கநாதன் வீட்டில் இருந்த பூச்சிக் கொல்லி மருந்தைக் குடித்து மயங்கிக் கிடந்தாா். இதைக் கண்ட அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

அங்கு அவா் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து, ஆா்.எஸ். மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.