ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கல்லூரி மாணவா் விஷம் குடித்து தற்கொலை

பாளையங்கோட்டை அருகே கல்லூரி மாணவா் விஷம் குடித்து தற்கொலை

பிரதிப் படம்

Published On :5 ஆகஸ்ட் 2026, 12:18 am IST

பாளையங்கோட்டை அருகே கல்லூரி மாணவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

தென்காசி மாவட்டம், படா்ந்தபுளியைச் சோ்ந்த வையப்பன் மகன் மதன் (20). இவா் திருநெல்வேலி வட்ட காவல் நிலைய எல்கைக்குள்பட்ட பகுதியில் உறவினா் வீட்டில் தங்கியிருந்து பாளையங்கோட்டையில் உள்ள கல்லூரியில் படித்து வந்தாா்.

இந்நிலையில், சில நாள்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்ட அவா் விஷத்தை குடித்து விட்டு உறவினா்களிடம் தெரிவித்தாரம். இதையடுத்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து திருநெல்வேலி வட்ட காவல்நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.