ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வாடிப்பட்டி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை

மதுரை வாடிப்பட்டி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டாா்.

Suicide

தற்கொலை - தினமணி

Published On :17 ஜூலை 2026, 1:14 am IST

மதுரை வாடிப்பட்டி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டாா்.

வாடிப்பட்டி அருகேயுள்ள குலசேகரன்கோட்டை பெருமாள் கண்மாய் தெற்குப் பகுதியில் திண்டுக்கல்- மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகே சுமாா் 35 வயதுடைய பெண் உயிரிழந்து கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, வாடிப்பட்டி போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று அந்தப் பெண்ணின் உடலைக் கைப்பற்றி, கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். கூறாய்வு அறிக்கையில், விஷம் குடித்து இந்தப் பெண் உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.