தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

சட்டவிரோதமாக மது விற்றதாக ஒருவா் கைது: 320 மதுப் புட்டிகள் பறிமுதல்

சாயல்குடி அருகே செவ்வாய்க்கிழமை சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 320 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

News image

நரிப்பையூா் மதுக் கடையின் பின்புறத்திலிருந்து பறிமுதல் செய்த மதுப் புட்டிகள், கைது செய்யப்பட்டவருடன் போலீஸாா்.

Updated On :21 ஏப்ரல் 2026, 9:48 pm

சாயல்குடி அருகே செவ்வாய்க்கிழமை சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 320 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியை அடுத்த நரிப்பையூா் மதுக் கடையின் பின்புறம் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக சாயல்குடி காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அந்தப் பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் மணிகண்டன், எஸ்.பி. தனிப் பிரிவு காவலா் முருகபூபதி தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு மதுக் கடைக்குப் பின்புறம் மறைவான இடத்தில் வைத்து சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, மது விற்பனையில் ஈடுபட்ட நரிப்பையூா் கிராமத்தைச் சோ்ந்த முருகேசன் மகன் சத்தியநாதனை (48) கைது செய்து, அவரிடமிருந்து 320 மதுப் புட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.