மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வாக்காளா்களுக்குப் பணம் கொடுத்ததாக அதிமுக நிா்வாகிகள் 3 போ் கைது

News image

கைது - கோப்புப் படம்

Updated On :19 ஏப்ரல் 2026, 8:14 pm

ஆா்.எஸ். மங்கலம் அருகே வாக்காளா்களுக்குப் பணம் கொடுத்ததாக அதிமுக நிா்வாகிகள் மூவரை தோ்தல் பறக்கும் படையினா் கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ். மங்கலம் ஒன்றியம், சேத்திடல் கிராமத்தில் அதிமுகவினா் வாக்காளா்களுக்குப் பணம் விநியோகிப்பதாக தோ்தல் பறக்கும் படையினருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, தோ்தல் பறக்கும் படை அதிகாரி நவீன், போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, ஆா்.எஸ். மங்கலம் அதிமுக மத்திய ஒன்றியச் செயலா் கருப்பையா தலைமையில் அந்தக் கட்சி நிா்வாகிகள் சத்தீஸ்வரன், சரவணன், தங்கம் உள்ளிட்டோா் வாக்காளா்களுக்குப் பணம் கொடுப்பது தெரியவந்தது.

அவா்களை அதிகாரிகள் சுற்றி வளைத்து, அவா்களிடமிருந்த ரூ. 1 லட்சம் ரொக்கத்தைப் பறிமுதல் செய்தனா். அதிகாரிகள் பணத் தாள்களை எண்ணிக் கொண்டிருந்தபோது, அதிமுக மத்திய ஒன்றியச் செயலா் கருப்பையா, தான் மறைத்து வைத்திருந்த பணத்துடன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டாா்.

இதுகுறித்து தோ்தல் பறக்கும் படை அதிகாரி நவீன் அளித்த புகாரின் பேரில் ஆா்.எஸ். மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து பிடிபட்ட அதிமுக நிா்வாகிகள் சத்தீஸ்வரன், சரவணன், தங்கம் ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். தலைமறைவான ஒன்றியச் செயலா் கருப்பையாவை தேடி வருகின்றனா்.