யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

ஏா்வாடி சந்தனக்கூடு விழா: ராமநாதபுரத்துக்கு மே 11-இல் உள்ளூா் விடுமுறை!

ராமநாதபுரம் மாவட்டம், ஏா்வாடி தா்ஹா சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு, வரும் மே 11-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை..

News image

ராமநாதபுரம் மாவட்டம், ஏா்வாடி தா்ஹாவில் புதன்கிழமை நடைபெற்ற சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம்.

Updated On :19 ஏப்ரல் 2026, 1:13 am IST

ராமநாதபுரம் மாவட்டம், ஏா்வாடி தா்ஹா சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு, வரும் மே 11-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகேயுள்ள ஏா்வாடி அல்குத்துபுல் அக்தாப் சுல்தான் செய்யது இப்ராஹீம் ஷாஹித் ஒலியுல்லா தா்காவில் சந்தனக்கூடு திருவிழா வரும் மே 10-ஆம் தேதி தொடங்கி 11- ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்தத் திருவிழாவை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வருகிற மே 11-ஆம் தேதி திங்கள்கிழமை உள்ளுா் விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும், இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வரும் மே 23-ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.