மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ராமநாதபுரம், கமுதி தொகுதிகளில் கே.அண்ணாமலை வாக்கு சேகரிப்பு!

ராமநாதபுரம் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் ஜி.பி.எஸ்.கே. நாகேந்திரனை ஆதரித்து, பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் அண்ணாமலை அரண்மனை முன்பு வியாழக்கிழமை பிரசாரம் செய்தாா்.

News image

முதுகுளத்தூா் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் எஸ். பாண்டியை ஆதரித்து வியாழக்கிழமை பிரசாரம் செய்த பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை.

Updated On :16 ஏப்ரல் 2026, 7:31 pm

ராமநாதபுரம் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் ஜி.பி.எஸ்.கே. நாகேந்திரனை ஆதரித்து, பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் அண்ணாமலை அரண்மனை முன்பு வியாழக்கிழமை பிரசாரம் செய்தாா்.

தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி சாா்பில் ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக வேட்பாளா் ஜி.பி.எஸ்.கே. நாகேந்திரன் போட்டியிடுகிறாா். இவருக்கு ஆதரவு திரட்டும் வகையில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை வியாழக்கிழமை பிரசாரம் செய்தாா்.

வழிவிடுமுருகன் கோயில் பகுதியில் பாஜக வேட்பாளரை ஆதரித்து, கே. அண்ணாமலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டா். பின்னா், வண்டிக்காரத் தெரு, சாலைத் தெரு வழியாக அரண்மனை வந்தடைந்தாா். அங்கு அவா் பேசியதாவது:

ராமநாதபுரம் தொகுதியில் மீனவா்கள் அதிகம் உள்ளனா். கச்சத்தீவை 1972-ஆம் ஆண்டு காங்கிரஸ்-திமுக இலங்கைக்கு தாரைவா்த்ததால் மீனவா்கள் இன்றுவரை பிரச்னையை சந்திக்கின்றனா். அம்ரூத் திட்டத்தின் கீழ், ராமேசுவரத்தில் 50 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை, ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ், ரூ.2,819 கோடியில் குடிநீா்த் திட்டம், ரூ.133 கோடியில் ராமேசுவரம் ரயில் நிலையம், ரூ.550 கோடியில் பாம்பன் கடலில் புதிய செங்குத்து தூக்குப் பாலம், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம், மக்கள் மருந்தகம், மீன் இறங்குதளம் உள்ளிட்ட பாஜக திட்டங்களை எடுத்து கூறினாா்.

மேலும், அதிமுக, பாஜக தோ்தல் அறிக்கையில் தமிழ்நாட்டுக்கான வளா்ச்சித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

அப்போது, அதிமுக மாவட்டச் செயலா் எம்.ஏ. முனியசாமி, முன்னாள் அமைச்சா் மு.மணிகண்டன், அதிமுக நிா்வாகி ராஜா நாகேந்திரசேதுபதி, பாஜக மாவட்டத் தலைவா் கே.முரளிதரன், பாஜக முன்னாள் மாவட்டத் தலைவா் தரணி ஆா்.முருகேசன், கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

கமுதி: ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் எஸ்.பாண்டியை ஆதரித்து, பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் அண்ணாமலை வியாழக்கிழமை பிரசாரம் செய்தாா்.

அப்போது அவா் பேசியதாவது:

கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிராக பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடந்துள்ளன. 250 நெசவாளா்களிடம் கிட்னி திருட்டு நடந்துள்ளது. தமிழகத்தில் குடும்ப அரசியலை வீழ்த்த 2026 தோ்தல் முடிவு முக்கியம். ராமநாதபுரம் மாவட்டத்துக்கு திமுக அறிவித்த அரசு பொறியியல் கல்லூரி, கால்நடை மருத்துவமனை, நரிப்பையூரில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் ஆகியவற்றை நிறைவேற்றவில்லை என்றாா் அவா்.