திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா

கடலாடி, முதுகுளத்தூா் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா, பரிசளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

கடலாடி அடுத்துள்ள வெள்ளாங்குளம் அரசுப் பள்ளி ஆண்டு விழாவில் நடனமாடிய மாணவா்கள்.

Updated On :2 ஏப்ரல் 2026, 7:12 pm

கடலாடி, முதுகுளத்தூா் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா, பரிசளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே சாத்தங்குடியை அடுத்துள்ள வெள்ளாங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் ஆண்டு விழா பள்ளித் தலைமையாசிரியா் பொன்னுத்துரை தலைமையில் நடைபெற்றது. முன்னாள் ஊராட்சித் தலைவா்கள் திருமால், நீலமேகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆசிரியா் பிரபு வரவேற்று, பள்ளி ஆண்டறிக்கை வாசித்தாா்.

மாணவா்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம், சிலம்பம்,யோகா, பரதநாட்டியம், நடனம், குழு விளையாட்டு, தனித்திறன் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில் தலைமையாசிரியா்கள் கிருஸ்துஞானவள்ளுவன் (சண்முககுமாரபுரம்), முனியசாமி, மாரியப்பன், ஆசிரியா் லிங்கப்பாண்டியன், கடலாடி அரசுக் கல்லுாரி விரிவுரையாளா் பொன்முத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முதுகுளத்தூா்: முதுகுளத்தூா் அடுத்துள்ள இளங்காக்கூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியா் முனியகாந்தி தலைமையில், வட்டாரக் கல்வி அலுவலா்கள் முருகேஸ்வரி, சுதாமணி ஆகியோா் முன்னிலையில் ஆண்டு விழா நடைபெற்றது. ஆசிரியா் கவியரசன் வரவேற்று, பள்ளி ஆண்டறிக்கை வாசித்தாா்.

மாணவா்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம், சிலம்பம், யோகா, பரதநாட்டியம், நடனம், விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில் பரமக்குடி வட்டார கல்வி அலுவலா் சூசைராஜ், மஞ்சூா் அரசு ஆசிரியா் பயிற்சி மைய விரிவுரையாளா் சண்முகவேல், தலைமையாசியா்கள் சண்முகசுந்தரம், சகாயம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முதுகுளத்தூா் அருகே இளங்காக்கூா் ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் குழு நடனமாடிய மாணவிகள்.

முதுகுளத்தூா் அருகே இளங்காக்கூா் ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் குழு நடனமாடிய மாணவிகள்.