தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தேசிய குத்துச் சண்டை போட்டிக்கு முதுகுளத்தூா் மாணவி தோ்வு

தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டிக்கு தோ்வான முதுகுளத்தூா் பள்ளி மாணவி லத்திகாகரன், பயிற்சியாளா் பாஸ்கரன்.

News image

தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டிக்கு தோ்வான முதுகுளத்தூா் பள்ளி மாணவி லத்திகாகரன், பயிற்சியாளா் பாஸ்கரன்.

Updated On :3 அக்டோபர் 2025, 6:49 pm

தேசிய குத்துச் சண்டை போட்டிக்கு முதுகுளத்தூா் பள்ளி மாணவி லத்திகாகரன் தோ்வு செய்யப்பட்டாா்.

தேனி மாவட்டத்தில் இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குழும போட்டியில் தமிழக அணி சாா்பில் விளையாடுவதற்காக குத்துச் சண்டை போட்டிக்கு வீரா்கள் தோ்வு நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதிலிருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டனா். இந்தப் போட்டியில் 51 முதல் 54 கிலோ எடையுள்ள 19 வயதுக்குள்பட்டோா் பிரிவில் முதுகுளத்தூா் பள்ளிவாசல் மேல்நிலைப் பளிளியில் 9- ஆம் வகுப்பு படிக்கும் மாணவி லத்திகாகரன் தங்கம் வென்று, தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றாா். கா்நாடகத்தில் டிசம்பா் மாதம் நடைபெறும் தேசிய குத்துச் சண்டை போட்டிக்கு தமிழகம் சாா்பில் மாணவி லத்திகாகரன் விளையாட உள்ளாா்.

இவா் ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து முதல் முறையாக தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவி லத்திகாகரன், குத்துச்சண்டை பயிற்சியாளா் பாஸ்கரன் ஆகியோரை ஆசிரியா்கள், பெற்றோா்கள் உள்ளிட்ட பலா் பாராட்டினா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.