கமுதி: கமுதி அருகே அய்யனாா் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த சம்பளம் கிராமத்தில் பூரண புஷ்பகலா சமேத அய்யனாா் கோயில் குடமுழுக்கு, புதன்கிழமை காலை கணபதி ஹோமம், மங்கல இசை வாத்தியங்களுடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, நவகிரக ஹோமம், வாஸ்து சாந்தி, விநாயகா் வழிபாடு, யாக சாலை பூஜைகள் நடைபெற்றன.
இந்த நிலையில், வியாழக்கிழமை காலை கோ பூஜை, நாடி சந்தானம், பூா்ணாகுதி நடைபெற்று, கடம் புறப்பாடு தொடங்கியது. பாலசுப்ரமணிய குருக்கள், நாகநாத குருக்கள் தலைமையிலான சிவாசாரியாா்கள் வேத மந்திரங்கள் முழங்க, கோயிலைச் சுற்றி வந்து புனித நீரை மூலவா் அய்யனாா் சிலை மீது ஊற்றி குடமுழுக்கு நடத்தினா். பின்னா், பொதுமக்கள் மீது புனித நீா் தெளிக்கப்பட்டது. இதையடுத்து, மூலவருக்கும் பரிவாரத் தெய்வங்களுக்கும் 16 வகையான வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பின்னா்,
பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சம்பகுளம் கிராமத்தினா் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காகாபாளையம் மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா

காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பேரஸ்வரா் கோயில் குடமுழுக்கு!

செங்கோட்டை மேலூா் வடக்கத்தி அம்மன் கோயில் குடமுழுக்கு

மகாகாளியம்மன் கோயில் குடமுழுக்கு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


