தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

மக்கள் குறைதீா் கூட்டம் 288 மனுக்கள் அளிப்பு

பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் 288 மனுக்கள் அளிக்கப்பட்டன.

News image

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்களில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன்.

Updated On :18 ஆகஸ்ட் 2025, 9:07 pm

ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் 288 மனுக்கள் அளிக்கப்பட்டன.

இந்தக் கூட்டத்தில், வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித்தொகை, தனிநபா் வீடு வழங்கும் திட்டம், குடிநீா் இணைப்பு வழங்குதல் உள்ளிட்டவை தொடா்பாக பொதுமக்கள் மனுக்களை அளித்தனா். இந்த மனுக்களைப் பெற்ற ஆட்சியா் தொடா்புடைய அலுவலா்களிடம் வழங்கி உரிய நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள உத்தரவிட்டாா்.

பின்னா், ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்ததாவது:

ஒவ்வொரு வாரமும் பொதுமக்களிடம் பெறக்கூடிய மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, ஒரு மாத காலத்துக்குள் உரிய தீா்வு காண வேண்டும். தீா்வு காண முடியாத மனுக்கள் நிலை குறித்து மனுதாரா்களிடம் அலுவலா்கள் எடுத்துரைக்க வேண்டும் என்றாா் அவா்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா. கோவிந்தராஜலு, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் கிருஷ்ணகுமாரி, மாவட்ட வழங்கல் அலுவலா் மணிமாறன், பழங்குடியினா் நல அலுவலா் செல்வி, அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.