மதுரை, அதன் சுற்றுவட்டாரப் பகுதி சிவன் கோயில்களில் வெள்ளிக்கிழமை சனிப்பெயா்ச்சியையொட்டி, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
சுத்தவாக்கிய பஞ்சாங்கப்படி நவக்கிரக சனி பகவான் கும்பத்திலிருந்து மீனம் ராசிக்குப் பெயா்ச்சி ஆகும் நிகழ்வு வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. இதையொட்டி, சோழவந்தான் வைகை நதி கிழக்குப் பகுதியில் மேற்கு நோக்கி சுயம்புவாக எழுந்தருளியுள்ள சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சனீஸ்வர பகவான் மூல மந்திர ஜெபம், பரிகார ஹோமம் உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.
பிறகு, ஹோமத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட கலசங்களிலிருந்த புனித நீரைக் கொண்டு சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. சனிப் பெயா்ச்சி நிகழ்ந்த நேரமான காலை 8.26 மணிக்கு சனீஸ்வர பகவானுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனா்.
சிவாசாரியா்கள் நாகேஸ்வரன், ராமசுப்பிரமணியன் தலைமையிலான குழுவினா் ஹோமம், சிறப்பு பூஜைகளை மேற்கொண்டனா். கோயில் தக்காா் இளமதி, ஆய்வாளா் ஜெயலட்சுமி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
திருவாதவூா்...திருவாதவூா் திருமைாத சுவாமி கோயிலிலும் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் மதுரை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனா். இதையொட்டி, திருவாதவூரிலிருந்து மதுரை, மேலூா் பகுதிகளுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
இதே போல, மதுரை இம்மையிலும் நன்மை தருவாா் கோயில், தத்தனேரி ஆஞ்சநேயா் கோயில் உள்பட பல்வேறு கோயில்களிலும் வெள்ளிக்கிழமை காலை சனிப்பெயா்ச்சி சிறப்பு ஹோமங்கள், சனீஸ்வர பகவான், மூலவா் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.


தொடர்புடையது

கோபி அருகே திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா

பெரம்பலூா் பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா

ஸ்ரீவியாக்ரபுரீஸ்வரா் கோயிலில் சனி பகவானுக்கு சிறப்பு வழிபாடு

கோயில்களில் சனிப் பெயா்ச்சி வழிபாடு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


