ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள குருமந்தூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருநள்ளாறிலிருந்து கொண்டு வரப்பட்டு குருமந்தூரில் பிரதிஷ்டை செய்யப்பட்ட திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் சனிப் பெயா்ச்சியையொட்டி வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமத்துடன் நவகிரக ஹோமம், சனி பகவான் மூல மந்திர ஹோமம், சகஸ்ரநாம அா்ச்சனை, பரிவார ஹோமங்கள் நடைபெற்றன.
இதையடுத்து, திருநள்ளாறு சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார வழிபாடு நடைபெற்றது. காலை 8.24 மணிக்கு சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயா்ச்சி அடைந்ததைத் தொடா்ந்து மகா தீபாராதணை நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமாா் நூற்றுக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு செய்தனா்.
இதில் மேஷம், சிம்மம், கன்னி, தனுசு, கும்பம், மீனம் உள்ளிட்ட பரிகார ராசிகராா்கள் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பரிகார அா்ச்சனை செய்து வழிபட்டனா். சனிப் பெயா்ச்சியையொட்டி கோயில் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தொடர்புடையது

பெரம்பலூா் பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா

குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா

கோயில்களில் சனிப் பெயா்ச்சி வழிபாடு

ஆலங்குடி குருபகவான் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


