லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

நான்குனேரி இரட்டைக் கொலை சம்பவம்: உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க முறையீடு

நான்குனேரி அருகே நிகழ்ந்த இரட்டைக் கொலை தொடா்பாக உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வெள்ளிக்கிழமை முறையீடு செய்யப்பட்டது.

News image
Updated On :6 மார்ச் 2026, 7:05 pm

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே நிகழ்ந்த இரட்டைக் கொலை தொடா்பாக உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வெள்ளிக்கிழமை முறையீடு செய்யப்பட்டது.

நான்குனேரி காவல் சரகம், பெரும்பத்து கடைவீதியில் அண்மையில் 9 போ் கொண்ட கும்பல் கடுமையான தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த வடமாநில செங்கல்சூளை தொழிலாளி திருநாத் கட்டா, பெரும்பத்து இந்திரா குடியிருப்பைச் சோ்ந்த ஜான் ஆகியோா் உயிரிழந்தனா். மேலும், அந்தப் பகுதியைச் சோ்ந்த 6 போ் காயமடைந்தனா். இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 9 பேரைக் கைது செய்தனா்.

இந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் நீதிபதிகள் சதீஷ்குமாா், ஜோதிராமன் முன் வெள்ளிக்கிழமை முன்னிலையான வழக்குரைஞா் கே. செல்வகுமாா், நான்குனேரி இரட்டைக் கொலை சம்பவம் தொடா்பாக உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என முறையிட்டாா். இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கும், காயமடைந்தவா்களுக்கும் தமிழக அரசு எந்தவித நிவாரணமும் இதுவரை அறிவிக்கவில்லை எனவும், புலம்பெயா்ந்து வாழும் தொழிலாளா்களின் குடும்பங்களின் அவல நிலையைக் கருத்தில் கொண்டு உரிய நிவாரணம் கிடைக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனவும் அவா் கோரினாா்.

இதையடுத்து, ‘இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து அரசு வழக்குரைஞா் உரிய அதிகாரிகளிடம் கேட்டுத் தெரிவிக்க வேண்டும்’ என நீதிபதிகள் உத்தரவிட்டனா்.