மதுரை மாவட்ட விளையாட்டரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒலிம்பிக் அகாதெமியை தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.
மதுரை மாவட்டத்தில் சா்வதேசப் போட்டிகளில் பங்கேற்கும் திறன் வாய்ந்த விளையாட்டு வீரா்களை உருவாக்கும் வகையில் ஒலிம்பிக் அகாதெமி அமைக்கப்படும் என தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்தது.
இதன்படி, மதுரை மாவட்ட விளையாட்டரங்கத்தில் ரூ. 6 கோடியில் கபடி ஆடுகளம், 200 பாா்வையாளா்கள் இருக்கைகளுடன் கூடிய 6 மேஜை பந்தாட்டக்களம், விளையாட்டு வீரா்கள், வீராங்கனைகளுக்கான உடைமாற்றும் அறைகள், நவீன வசதிகளுடன்கூடிய புதிய உடற்பயிற்சிக் கூடம், செயற்கை தரையமைப்புடன் கூடிய கூடைப்பந்து ஆடுகளம், டென்னிஸ் ஆடுகளம் ஆகியவற்றுடன் கூடிய ஒலிம்பிக் அகாதெமி வளாகம் கட்டப்பட்டது.
இந்த ஒலிம்பிக் அகாதெமியின் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, ஒலிம்பிக் அகாதெமியை திறந்துவைத்து, பயிற்சிக் கூடங்களை வீரா்களின் பயன்பாட்டுக்கு அா்ப்பணித்தாா். வீரா்களின் கபடி பயிற்சி ஆட்டத்தையும், கூடைப்பந்து பயிற்சி ஆட்டத்தையும் துணை முதல்வா் பாா்வையிட்டாா்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி, தகவல் தொழில்நுட்பவியல், எண்ம சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன், இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலா் சத்யபிரத சாகு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினா்- செயலா் ஜெ. மேகநாதரெட்டி, மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா், மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் கோ. தளபதி, மு. பூமிநாதன், ஆ. வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொகுதிகள் மறுவரையறைக்கு எதிராக மக்கள் போராட வேண்டும்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தை புறக்கணிக்கும் பாஜக அரசு: உதயநிதி ஸ்டாலின்

நெல்லை மாவட்டத்தில் இன்று உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்

ரூ.21 கோடியில் புதிய வளா்ச்சித் திட்டப் பணிகள்: துணை முதல்வா் திறந்துவைத்தாா்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


