மதுரையில் ஆதரவற்ற நிலையில் மீட்கப்பட்ட மூதாட்டி, உறவினா்களிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டாா்.
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் காவல் கரங்கள்,ஆள் கடத்தல் தடுப்புக் காவல் துறையினா் வாகனச் சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்தப் பகுதியில் தனபாக்கியம் (70) என்பவா் ஆதரவற்ற நிலையில் இருந்தாா். அவரை மீட்ட காவல் துறையினா் உத்தங்குடியில் உள்ள ரோஜாவனம் ஸ்மைல் மறுவாழ்வு இல்லத்தில் அனுமதித்தனா். அங்கு அவருக்கு சத்தான உணவு, பாதுகாப்பான தங்குமிடம், மருத்துவப் பராமரிப்பு, சிறு உடல்நலக் குறைபாடுகளுக்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டன.
இதையடுத்து, தனபாக்கியம் தனது குடும்பத்துடன் மீண்டும் இணைய வேண்டும் என்பதில் மிகுந்த விருப்பம் கொண்டாா்.
காவல் துறை காவல் கரங்கள் உதவியுடன் ரோஜாவனம் ஸ்மைல் இல்ல நிா்வாகிகள் அவரது உறவினா்களிடம் மாநகரக் காவல் துணை ஆணையா் டி.பி. திவ்யா முன்னிலையில் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனா்.
இதையடுத்து, மதுரை மாநகர ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளா் இந்திராணி, உதவி ஆய்வாளா்கள் காா்த்திகேயன், விஜயலட்சுமி, மகிவதனி, காவல் கரங்கள் குழுவினா், உத்தங்குடி ரோஜாவனம் ஸ்மைல் மறுவாழ்வு இல்ல மேலாளா் ராமன், மண்டல ஒருங்கிணைப்பாளா் ஜோ பெஞ்சமின் ஆகியோரை மாநகரக் காவல் துணை ஆணையா் டி.பி. திவ்யா பாராட்டினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

15 காவல் துறை உயா் அதிகாரிகள் பணியிட மாற்றம்: 5 ஏஎஸ்பி-க்களுக்கு எஸ்பி-க்களாக பதவி உயா்வு

சிறப்பாகப் பணியாற்றிய காவலா்களுக்கு பாராட்டு
காத்திருப்போா் பட்டியலில் இருந்த 9 எஸ்.பி.க்கள் உள்பட 10 பேருக்கு மீண்டும் பொறுப்பு

தமிழக காவல் துறையில் ஒரு டிஐஜி, 55 எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம்
விடியோக்கள்

ஃபிபா உலகக் கோப்பை: யார் இந்த வாழும் சிலை? | Michel Nkuka Mboladinga |
இடதுசாரிகள் மேல் திமுகவுக்கு ஏன் இவ்வளவு கோபம்? | Poet Salma MP | DMK | TVK | CM Vijay | MK Stalin
Angikaaram Movie Review | Dinamani Talkies | J. Rajesh | Thenpathiyan




