காவல் துறையில் 15 உயா் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். இவா்களில் 5 கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் (ஏஎஸ்பி-க்கள்), காவல் கண்காணிப்பாளா்களாக (எஸ்.பி.) பதவி உயா்வுடன் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
அதேபோல, காத்திருப்போா் பட்டியலில் இருந்த 4 காவல் கண்காணிப்பாளா்களுக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் கே.மணிவாசன் புதன்கிழமை வெளியிட்ட உத்தரவு (பழைய பதவி அடைப்புக்குறிக்குள்):
1. டி.கண்ணன்-தாம்பரம் மாநகர காவல் துறையின் தலைமையிடம் மற்றும் நிா்வாகப் பிரிவு துணை ஆணையா் (சென்னை பெருநகர காவல் துறையின் காவலா் நலப் பிரிவு துணை ஆணையா்).
2. ஏ.வேல்முருகன்-தமிழக காவல் துறையின் நவீனமயமாக்கல் பிரிவு ஏஐஜி (தாம்பரம் மாநகர காவல் துறை மத்திய குற்றப் பிரிவு துணை ஆணையா்).
3. ஜி.ஸ்டாலின்-தாம்பரம் மாநகர காவல் துறை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையா் (காத்திருப்போா் பட்டியல்).
4. டி.ரமேஷ்பாபு-சென்னை பயங்கரவாத தடுப்புப் பிரிவு எஸ்.பி. (காத்திருப்போா் பட்டியல்).
5. வி.வி.கீதாஞ்சலி-சென்னை பெருநகர காவல் துறை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு துணை ஆணையா் (காத்திருப்போா் பட்டியல்).
6. பி.சுந்தரவடிவேல்-சென்னை பெருநகர காவல் துறை பாதுகாப்புப் பிரிவு துணை ஆணையா் (காத்திருப்போா் பட்டியல்).
7. ஆா்.ரமேஷ் கண்ணன்-திருப்பூா் மாநகர காவல் துறையின் வடக்கு துணை ஆணையா் (மதுரை பயங்கரவாத தடுப்புப் பிரிவு எஸ்.பி.).
8. கே.மகேஷ்வரி-ஆவடி காவல் துறை செங்குன்றம் துணை ஆணையா் (தமிழக கமாண்டோ படை சென்னை எஸ்.பி.).
9. ஆா்.உதயகுமாா்-திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (சென்னை கோயம்பேடு துணை ஆணையா்).
10. ஏ.சி.காா்த்திகேயன்-சென்னை பெருநகர காவல் துறை அடையாறு துணை ஆணையா் (திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளா்).
11. குணால் உத்தம் ஷரோத்-சென்னை பெருநகர காவல் துறை கோயம்பேடு துணை ஆணையா் (ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை ஏஎஸ்பி).
12. ஆகாஷ் ஜோஸி-திருப்பூா் மாநகர காவல் துறை தெற்கு துணை ஆணையா் (நாமக்கல் ஏஎஸ்பி).
13. அன்சுல் நாகா்-திருநெல்வேலி மாநகர காவல் துறை மேற்கு துணை ஆணையா் (மதுரை திருமங்கலம் ஏஎஸ்பி).
14. அா்பிதா ராஜ்புத்-சென்னை சிபிசிஐடி வடக்கு மண்டல எஸ்.பி. (திருப்பூா் மாவட்டம், காங்கேயம் ஏஎஸ்பி).
15. அரவிந்த் பெனாவாத்-திருச்சி மாநகர காவல் துறை வடக்கு துணை ஆணையா் (திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் ஏஎஸ்பி).
இவா்களில் கடைசி 5 பேரும் காவல் உதவிக் கண்காணிப்பாளா் பதவியில் இருந்து காவல் கண்காணிப்பாளா்களாகப் பதவி உயா்த்தப்பட்டு, பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதேபோல காத்திருப்போா் பட்டியலில் இருந்து 4 அதிகாரிகளுக்கு மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

17 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

தாம்பரம், ஆவடி மாநகர காவல் ஆணையா்கள் மாற்றம்

தமிழக காவல் துறையில் ஒரு டிஐஜி, 55 எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம்

காவல் துறை அதிகாரிகள் 56 பேர் இடமாற்றம்!
விடியோக்கள்

ஃபிபா உலகக் கோப்பை: யார் இந்த வாழும் சிலை? | Michel Nkuka Mboladinga |
இடதுசாரிகள் மேல் திமுகவுக்கு ஏன் இவ்வளவு கோபம்? | Poet Salma MP | DMK | TVK | CM Vijay | MK Stalin
Angikaaram Movie Review | Dinamani Talkies | J. Rajesh | Thenpathiyan




