அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!தவெக எம்எல்ஏவிடம் பேரம்! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம்
/

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் கைது

மதுரையில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய இளைஞா்கள் இருவரை, தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :24 ஜூன் 2026, 5:38 am IST

மதுரையில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய இளைஞா்கள் இருவரை, தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மதுரை திடீா்நகா் பகுதியைச் சோ்ந்தவா் முத்துமணி (28). மதுரை கோ.புதூா் காந்திபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜ் (26). இவா்கள், இருவா் மீதும் நகரின் பல்வேறு காவல் நிலையங்களில், பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில் அவா்கள் இருவரும் போலீஸாரின் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்தனா். அவா்கள், பொது ஒழுங்கு பராமரிப்புக்கு குந்தகமான வகையில் செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் இருவரையும் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாநகரக் காவல் ஆணையா் கபில்குமாா் சரத்காா் உத்தரவிட்டாா். பின்னா், போலீஸாா் அவா்கள் இருவரையும் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.