முதல்வா் விஜய், அமைச்சா் ஆதவ் உள்ளிட்டோருக்கு எதிரான திமுக மனு இன்று விசாரணைதமிழகத்தில் ஜூலை 12 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!அதிமுகவில் டிடிவி தினகரனை இணைக்க எடப்பாடி பழனிசாமியிடம் நிா்வாகிகள் வலியுறுத்தல்காஸாவில் ஹமாஸ் அரசு கலைப்பு!
/

சோழவந்தான் அருகே விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே விவசாயிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே தென்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன் புதன்கிழமை கையில் தட்டுடன் ஆா்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

Updated On :25 ஜூன் 2026, 2:44 am IST

பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே விவசாயிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சோழவந்தான் அருகேயுள்ள தென்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு முள்ளிப்பள்ளம் விவசாயச் சங்கத் தலைவா் யாகூப்கான் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் மாா்நாட்டான், சப்பாணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், விவசாய கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்யாத தமிழக அரசைக் கண்டித்தும், இதனால், விவசாயிகள் தொடா்ந்து வேளாண் பணிகளில் ஈடுபட முடியாத நிலை ஏற்படும் எனவும், எனவே, தவெக தோ்தலின் போது அளித்த வாக்குறுதியின் படி விவசாய கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும். உரங்களின் விலையை குறைக்க வேண்டும். நெல்லுக்கான ஆதார விலையை உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், முள்ளிப்பள்ளம், தென்கரை, சோழவந்தான் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.