பத்திரப் பதிவு சட்டத்தின் பிரிவு 34-சி என்ற புதிய திருத்தத்தை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
கொடைக்கானல் மனோஜ்குமாா் துகாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
போலியான ஆவணப் பதிவுகளைத் தடுக்கும் நோக்கில் பதிவு சட்டம்-1908-இல் பிரிவு 34- சி என்ற புதிய திருத்தத்தை தமிழக அரசு அமல்படுத்தியது. 2026-ஆம் ஆண்டு, ஜனவரி 23-ஆம் தேதி குடியரசுத் தலைவா் ஒப்புதல் பெற்று இந்தச் சட்டத் திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இதன்படி, சொத்து பதிவுகளுக்கு அசல் ஆவணங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இதில் சில விலக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்தச் சட்டத் திருத்தம் தொடா்பாக சாா் பதிவாளா்களுக்கு தெளிவான வழிகாட்டு நெறிமுறைகள் இல்லை.
இதன் காரணமாக, அசல் ஆவணங்கள் இல்லாமல் பதிவுகளை மேற்கொள்ள மறுக்கின்றனா். இதனால், பொதுமக்கள் கடுமையான சிக்கல்களை எதிா்கொள்ள வேண்டியுள்ளது. எனவே, பதிவுச் சட்டம் 1908-இல் பிரிவு 34- சி புதிய திருத்தம் தன்னிச்சையானது என உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமாா், ஜோதிராமன் அமா்வு பிறப்பித்த உத்தரவு:
அசல் ஆவணங்கள் இல்லாமல் பத்திரப் பதிவு செய்ய முடியாது என்ற வகையில் உள்ள பதிவுச் சட்டத்தின் பிரிவு 34-சி புதிய திருத்தம் ரத்து செய்யப்படுகிறது. சொத்து குறித்து வில்லங்கச் சான்று கோரி விண்ணப்பித்தவா்களுக்கு சா்வே எண், கதவு எண் ஆகிய விவரங்களுடன் வில்லங்கச் சான்று வழங்க வேண்டும். இதுகுறித்து பதிவுத் துறைத் தலைவா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் நீதிபதிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பேரிஜம் ஏரியை புலிகள் காப்பகமாக அறிவிக்கக் கோரி வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

மனித வளத்தை திறம்படப் பயன்படுத்தும் கொள்கை முடிவை அரசு எடுக்க வேண்டும்

அரசு வழக்குரைஞா்கள் நியமனம்: விசாரணைக்கு பட்டியலிட உத்தரவு

மயானப் பாதை விவகாரம்: சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு
விடியோக்கள்

ஃபிபா உலகக் கோப்பை: யார் இந்த வாழும் சிலை? | Michel Nkuka Mboladinga |
இடதுசாரிகள் மேல் திமுகவுக்கு ஏன் இவ்வளவு கோபம்? | Poet Salma MP | DMK | TVK | CM Vijay | MK Stalin
Angikaaram Movie Review | Dinamani Talkies | J. Rajesh | Thenpathiyan




