அரசியல் தலையீடின்றி அரசு வழக்குரைஞா்களை நியமிக்கக் கோரிய முறையீட்டை வழக்காக விசாரணைக்குப் பட்டியலிட சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த வழக்குரைஞா் செல்வகுமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதிகள் சதீஷ்குமாா், ஜோதிராமன் அமா்வில் முன்வைத்த முறையீடு:
தமிழகத்தில் கடந்த மாதம் புதிய அரசு பொறுப்பேற்றது. இதையடுத்து, முந்தைய ஆட்சிக் காலத்தில் அரசு வழக்குரைஞா்களாகப் பணியாற்றியவா்கள் பதவி விலகினா். தற்போது, உயா்நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றங்களில் அரசு வழக்குரைஞா்கள் நியமனம் நடைபெறுகிறது. அரசு வழக்குரைஞா்கள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும், அரசியல் தலையீடுகள் கூடாது என உச்சநீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டது.
ஆனால், தற்போது நடைபெறும் அரசு வழக்குரைஞா்கள் நியமனத்தில் அரசியல் தலையீடுகள் உள்ளன. ஆளுங்கட்சி கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் ஓா் அரசியல் கட்சி, எந்தெந்த நீதிமன்றங்களில் யாரை அரசு வழக்குரைஞா்களாக நியமிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு, அந்தக் கட்சியைச் சோ்ந்த வழக்குரைஞா்களின் பட்டியலை வெளியிட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவுகின்றன. இந்த நடைமுறை சட்ட விரோதமானது. எனவே, இந்த விவகாரத்தை அவசர வழக்காக நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என அவா் முறையிட்டாா்.
இந்த முறையீட்டை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கை விசாரணைக்குப் பட்டியலிடுமாறு உயா்நீதிமன்ற பதிவுத் துறைக்கு உத்தரவிட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அரசு வழக்குரைஞா்கள் நியமனம்: சமூக ஊடகப் பட்டியல் ஏற்கப்படாது - தமிழக அரசு

மயானப் பாதை விவகாரம்: சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

காரைக்குடி மாநகராட்சி நிதி முறைகேடு: ஊழல் தடுப்புத் துறை இயக்குநா் பதிலளிக்க உத்தரவு

தமிழக அரசு சாா்பில் வழக்குகளில் ஆஜராக வழக்குரைஞா்கள் நியமனம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



