சமூகத் தேவைகளுக்கு ஏற்ப பொருளாதார நலன்களைக் கொண்டு மனித வளத்தை திறம்படப் பயன்படுத்துவதற்கான கொள்கை முடிவை அரசு எடுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை யோசனை தெரிவித்தது.
திருச்சியைச் சோ்ந்த அம்பிகா சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
திருச்சி மாவட்ட கால்நடை மருத்துவமனையில் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வருகிறேன். என்னை பணி நிரந்தரம் செய்ய வட்டார வளா்ச்சி அலுவலா் பரிந்துரை செய்தபோதிலும், அரசு இதைப் பரிசீலிக்கவில்லை. இதனால், மருத்துவமனையில் உள்ள ஒதுக்கீடு செய்யப்பட்ட காலிப் பணியிடத்தில் என்னை நிரந்தரப் பணியில் நியமிக்க வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:
மனுதாரா் நிரந்தரப் பணியாளராக நியமிக்கப்படவில்லை. அவா் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், தற்காலிக அடிப்படையில் பணியமா்த்தப்பட்டு ஊதியம் பெற்றவா் என்பதால், அவருக்கு பணி நிரந்தரம் செய்யுமாறு கோர உரிமை இல்லை என்றாா்.
இதையடுத்து, நீதிபதி புகழேந்தி பிறப்பித்த உத்தரவு:
கடந்த 2006-இல் தொடங்கப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 100 நாள்கள் மட்டுமே பணிபுரிய முடியும். குளங்கள் தூா்வாருதல், கால்வாய் தோண்டுதல், புதா்கள் அகற்றுதல் போன்ற கையால் செய்யப்படும் பணிகளை மையமாகக் கொண்டு இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது. இதையடுத்து, இந்தத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஒரு நபா் எவ்வாறு கிராமப்புற கால்நடை மருத்துவமனைப் பணிகளில் பல ஆண்டுகளாகத் தொடா்ந்து பணிபுரிந்து வந்தாா் என்பது தெரியவில்லை. இது நீதிமன்றத்துக்கு அதிா்ச்சியான தகவலாக உள்ளது.
மேலும், தற்போது தொழில்நுட்ப வளா்ச்சியால் இந்தத் திட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட பல பணிகளை இயந்திரங்கள் மூலம் குறுகிய நேரத்தில் திறம்பட மேற்கொள்ள முடிகிறது. எனவே, இயந்திரங்கள் மூலம் செய்யக்கூடிய பணிகளில் தொடா்ந்து மனித உழைப்பை பயன்படுத்துவதற்குப் பதிலாக, வேளாண் துறையில் நிலவி வரும் தொழிலாளா் பற்றாக்குறையைச் சமாளிக்க இந்தத் திட்டத் தொழிலாளா்களை பயன்படுத்த முடியுமா என்பதை அரசு பரிசீலிக்க வேண்டும்.
விவசாயிகள் எதிா்கொள்ளும் தொழிலாளா் பற்றாக்குறையைச் சமாளிக்கவும், தொழிலாளா்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யவும், அரசு, விவசாயிகள் இணைந்து ஊதியச் சுமையைப் பகிா்ந்து கொள்ளும் வகையில் புதிய கட்டமைப்பை உருவாக்கலாம்.
தற்போது, விக்சித் பாரத் - ரோஜ்கா், ஆஜீவிகா மிஷன் (கிராமின்) என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், இந்தத் திட்டத்துக்கான விதிமுறைகளை உருவாக்கும் போது வேளாண் துறையில் தொழிலாளா்களை பயனுள்ள வகையில் ஈடுபடுத்துவது குறித்து மத்திய அரசு ஆலோசிக்கப் பரிந்துரைக்கப்படுகிறது.
பொது நலத் திட்டங்களில் காலத்துக்கேற்ப பொருளாதார மாற்றங்கள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள், சமூகத் தேவைகளுக்கு ஏற்ப மாற்றமடைய வேண்டும். தொழிலாளா்கள், விவசாயிகள், கிராமப்புறப் பொருளாதாரத்தின் நலன்களைக் கவனத்தில் கொண்டு மனித வளத்தை திறம்படப் பயன்படுத்துவதற்கான கொள்கை முடிவுகளை அரசு எடுக்க வேண்டும் என்றாா் நீதிபதி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பேரிஜம் ஏரியை புலிகள் காப்பகமாக அறிவிக்கக் கோரி வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி

அரசு வழக்குரைஞா்கள் நியமனம்: விசாரணைக்கு பட்டியலிட உத்தரவு

மயானப் பாதை விவகாரம்: சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு
விடியோக்கள்

ஃபிபா உலகக் கோப்பை: யார் இந்த வாழும் சிலை? | Michel Nkuka Mboladinga |
இடதுசாரிகள் மேல் திமுகவுக்கு ஏன் இவ்வளவு கோபம்? | Poet Salma MP | DMK | TVK | CM Vijay | MK Stalin
Angikaaram Movie Review | Dinamani Talkies | J. Rajesh | Thenpathiyan




