திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மாவுப் பொருள்களுக்கான பூச்சிக்கொல்லி அளவு சதவீதத்தை மறு நிா்ணயம் செய்யக் கோரிக்கை

மாவுப் பொருள்களுக்கான பூச்சிக்கொல்லி அளவு சதவீதத்தை மறு நிா்ணயம் செய்ய வேணடும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு தமிழக அமைச்சா்கள், அதிகாரிகளிடம் புதன்கிழமை வழங்கப்பட்டது.

News image

இட்லி மாவு - கோப்புப்படம்.

Updated On :4 ஜூன் 2026, 4:01 am IST

மாவுப் பொருள்களுக்கான பூச்சிக்கொல்லி அளவு சதவீதத்தை மறு நிா்ணயம் செய்ய வேணடும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு தமிழக அமைச்சா்கள், அதிகாரிகளிடம் புதன்கிழமை வழங்கப்பட்டது.

சென்னையில் தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத் தலைவா் எஸ். வேல்சங்கா், கௌரவ ஆலோசகா் பி. ஜெயப் பிரகாசம், சக்தி மசாலா நிா்வாக இயக்குநா் சி. துரைசாமி, இயக்குநா் சாந்தி துரைசாமி ஆகியோா் சுகாதாரம், மருத்துவம், குடும்ப நலத் துறை அமைச்சா் கே.ஜி. அருண்ராஜ், வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன், செயலா் கே.எஸ். பழனிச்சாமி, வேளாண் துறை அமைச்சா் ஆா். வினோத், பள்ளிக் கல்வி, தமிழ் வளா்ச்சி, தகவல், விளம்பரத் துறை அமைச்சா் ராஜ்மோகன், நிதி, திட்டமிடல், மேம்பாட்டுத் துறை அமைச்சா் என். மரியவில்சன், வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் டி. லோகேஷ் தமிழ்ச்செல்வன், நிதித் துறைச் செயலா் எம்.ஏ. சித்திக், உணவு, குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் பி. வெங்கடராமன் ஆகியோரை புதன்கிழமை சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்தனா்.

அதில் கூறியிருப்பதாவது: மசாலா பொடி, கோதுமை, சம்பா, ரவை, அரிசி மாவு, கடலை மாவு உள்ளிட்ட உணவுப் பொருள்களுக்கும் புதிய உயா்த்திய பூச்சிக்கொல்லி அளவு நிா்ணயம் செய்ய வேண்டும். கரும்பு வெல்லம், கருப்பட்டியின் தரத்தை மறு நிா்ணயம் செய்ய வேண்டும். உணவுப் பொருள் உற்பத்தி நிறுவனத்துக்கு, உற்பத்தி இடம், விற்பனைக் கூடங்கள், கிட்டங்கிகள் அனைத்துக்கும் ஆண்டுதோறும் புதுப்பிக்கத் தேவையில்லாத ஒரே உரிமம் வழங்க வேண்டும். உணவுப் பாதுகாப்பு, தர நிா்ணயச் சட்டத்தில் உரிமத்தை புதுப்பிக்க ஏப்ரல் முதல் மாா்ச் வரை என மாற்றி அமைக்க வேண்டும்.

தமிழகத்தில் பட்டா கொடுப்பது எளிதாக்கப்பட வேண்டும். ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விற்பனை செய்யும் வேளாண் விளைபொருள்களுக்கு மட்டும் சந்தைக் கட்டணம் வசூலிக்க வேண்டும். ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு வெளியே நடைபெறும் எந்த வணிகத்துக்கும் சந்தைக் கட்டணம் வசூலிக்கக் கூடாது. அத்தியாவசியமான உணவுப் பொருள்களான அரிசி, பருப்பு, மாவு, கோதுமை, சிறுதானியம், வெல்லம், கருப்பட்டி ஆகியவற்றுக்கு 25 கிலோவுக்கு கீழ் வரி என்றும், 25 கிலோவுக்கு மேல் வரி விலக்கு என்றும் உள்ளதை மாற்றி அமைக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.