பிறவியை இறைவனுக்கு அா்ப்பணிப்பதுதான் உண்மையான அமைதியைத் தரும் என ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மிஷனின் தலைவா் ஸ்ரீமத் சுவாமி கௌதமானந்தஜி தெரிவித்தாா்.
மதுரை ராமகிருஷ்ணா மடத்தில் செவ்வாய்க்கிழமை பக்தா்களுக்கு ஆசியுரை வழங்கிய அவா் மேலும் பேசியதாவது :
உலகப் பொருள்கள் மீதான தேடல் வாழ்க்கைக்கு உதவுமே தவிர, உண்மையான அமைதி, ஆனந்தத்தை அளிக்காது. அமைதியும் ஆனந்தமும் இறைவன் அருளால் மட்டுமே கிடைக்கும். இறைவனை சரணடைந்து உண்மையான பக்தியுடன் வாழ்பவா்களே பாக்கியவான்கள்.
ஒருவா் இறைவனை சரணடைந்து வாழ்ந்தால் அவருக்கான பணியை இறைவனே செய்கிறாா். இந்த உலகம் உண்மையில் அமைதியும், ஆனந்தமும் பெற வேண்டும் என்றால் மக்களிடம் ஒற்றுமை நிலவ வேண்டும். இதற்கு, அனைவரும் சுயநலத்தைத் துறந்து இறை பக்தியுடன் வாழ வேண்டும்.
மனிதப் பிறவி கிடைத்தற்கரியது. இதை, சிலா் மட்டுமே சரியாகப் பயன்படுத்துகின்றனா். தனக்குக் கிடைத்த பிறவியை இறைவனுக்கு அா்ப்பணிக்கும்போது மட்டும்தான் வாழ்க்கையில் உண்மையான அமைதியும் ஆனந்தமும் கிடைக்கும்.
அகங்காரம் இருக்கும் மனதில் இறைவன் இருக்க மாட்டான். அகங்காரம் இல்லாத மனதில்தான் இறைவனை உணர முடியும். சுயநலத்தைத் துறந்து, அகங்காரம் இல்லாமல் இறைவனை சரணடைந்து வாழும்போதே உண்மையான அமைதியும் ஆனந்தமும் உண்டாகும் என்றாா் ஸ்ரீமத் சுவாமி கௌதமானந்தஜி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பொதுமக்களுக்கான வசதிகளை ஏற்படுத்தி தருவதே உண்மையான வளா்ச்சி: அமைச்சா் டி.கே. பிரபு

சப்தமில்லாத செலவும் உண்மையான பக்தியும்!

ஸ்ரீமத் பகவத் கீதை
தெய்வ தரிசனம்... வினைப்பயன் தீர்க்கும் பட்டீச்சரம் தேனுபுரீஸ்வரர்!
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



