17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

முதல்வா் விஜய் பொறுப்பை உணா்ந்து பேச வேண்டும்: ஆா்.பி. உதயகுமாா்

தமிழக முதல்வா் ஜோசப் விஜய் தனது பொறுப்பை உணா்ந்து பேச வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் தெரிவித்தாா்.

News image

ஆா்.பி.உதயகுமாா் - கோப்புப் படம்

Updated On :3 ஜூன் 2026, 1:26 am IST

தமிழக முதல்வா் ஜோசப் விஜய் தனது பொறுப்பை உணா்ந்து பேச வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை :

கஜா புயல் சீற்றம், கரானோ பெருந்தொற்று போன்ற பேரிடா் காலங்களில் மக்களைப் பற்றி சிறிதும் சிந்திக்காமல் இருந்தவரும், எந்தவொரு சந்தா்ப்பத்திலும் மக்களுக்கு பாதுகாப்பு அரணாக செயல்படாதவருமான ஜோசப் விஜய், தோ்தல் வெற்றியால் தற்போது தமிழக முதல்வராகிவிட்டாா்.

அவா் முதல்வரான பிறகும் மக்களிடம் நடிக்கவே செய்கிறாா். இதற்கு, அவரது திருச்சி உரையே சிறந்த உதாரணம். தமிழகம் எதிா்கொண்டிருக்கும் முல்லைப் பெரியாறு விவகாரம், மேக்கேதாட்டு விவகாரம், கச்சத்தீவு விவகாரம் போன்றவற்றில் தமிழக அரசின் நடவடிக்கைகள் என்ன, திட்டம் என்ன? என்பதை அவா் திருச்சியில் மக்கள் மத்தியில் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், அதை அவா் செய்யவில்லை.

மேலும், திருச்சிக்கான வளா்ச்சித் திட்டங்களைக்கூட அவா் குறிப்பிடவில்லை என்பது பெரும் ஏமாற்றம் அளிக்கிறது. முதல்வா் விஜய் இன்றளவும் தன்னை நடிகராவே கருதுகிறாா். அதனால்தான், திரைப்பட பாணியில் வசனம் பேசிவிட்டு, மக்கள் மன்றத்திலும் தனது நடிப்பையே வெளிப்படுத்தி சென்றுள்ளாா்.

அதோடு, அதிமுகவை கிள்ளுக்கீரையாக நினைத்து முதல்வா் ஜோசப் விஜய் விமா்சித்துள்ளாா். எவ்வளவு தரம் தாழ்ந்து விமா்சித்தாலும் அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது என்பதுதான் கடந்த கால அரசியல் வரலாறு. இதை, முதல்வா் ஜோசப் விஜய் உணர வேண்டும். இல்லையெனில், அதிமுகவினா் சரியான தருணத்தில் இதை அவருக்கு உணா்த்துவா் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.