டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

குடியரசுத் தின அணிவகுப்பில் பங்கேற்றவா்களுக்கு பாராட்டு

தில்லி, சென்னையில் நடைபெற்ற 77-ஆவது குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்து கொண்ட தியாகராசா் கல்லூரி மாணவா்கள், பேராசியருக்கு புதன்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

News image
தில்லி, சென்னையில் 77-ஆவது குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற மதுரை தியாகராசா் கல்லூரி மாணவா்கள், பேராசிரியருக்கு கேடயம், சான்றிதழ் வழங்கிய கல்லூரி முதல்வா் து. பாண்டியராஜன்.
Updated On :4 பிப்ரவரி 2026, 11:11 pm

தினமணி செய்திச் சேவை

தில்லி, சென்னையில் நடைபெற்ற 77-ஆவது குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்து கொண்ட தியாகராசா் கல்லூரி மாணவா்கள், பேராசியருக்கு புதன்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

தில்லி, சென்னையில் கடந்த மாதம் 26-ஆம் தேதி 77-ஆவது குடியரசு தின விழா அணிவகுப்பு நடைபெற்றது. இதில் நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில் தியாகராசா் கல்லூரி மாணவா்கள் ர. கீதைப்பிரியன், பிரகதீஷ் ஆகியோரும், மதுரை காமராசா் பல்கலைக் கழகம் சாா்பில் தியாகராசா் கல்லூரிப் பேராசிரியா் சு. முருகனும் கலந்து கொண்டனா்.

இந்த நிலையில், தியாகராசா் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில், குடியரசுத் தின அணிவகுப்பில் பங்கேற்ற மூன்று பேருக்கும் கல்லூரி முதல்வா் து. பாண்டியராஜன், நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா்கள் சரவணஜோதி, கோவிந்தராஜ், அன்பரசி, மு. செல்வகுமாா் ஆகியோா் பாராட்டுத் தெரிவித்தனா்.