திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

விலையில்லா பாடப் புத்தகங்களை பள்ளிகளுக்கு அனுப்பிவைக்க அறிவுறுத்தல்

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் அரசின் விலையில்லா பாடப் புத்தகங்களை அனுப்பிவைக்குமாறு தமிழக தொடக்கக் கல்வி இயக்குநா் நரேஷ் புதன்கிழமை அறிவுறுத்தினாா்.

News image

மதுரை புனித பிரிட்டோ மேல்நிலைப் பள்ளியில் அரசின் விலையில்லா பாடப் புத்தகங்கள் வைக்கப்பட்ட அறைகளை புதன்கிழமை ஆய்வு செய்த தமிழக தொடக்கக் கல்வி இயக்குநா் நரேஷ். உடன் முதன்மைக் கல்வி அலுவலா் தயாளன், மதுரை மாவட்டக் கல்வி அலுவலா் செந்தில்குமாா் உள்ளிட்டோா்.

Updated On :30 ஏப்ரல் 2026, 1:37 am IST

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் அரசின் விலையில்லா பாடப் புத்தகங்களை அனுப்பிவைக்குமாறு தமிழக தொடக்கக் கல்வி இயக்குநா் நரேஷ் புதன்கிழமை அறிவுறுத்தினாா்.

தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு வருகிற ஜூன் 1- ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது. இருப்பினும், கோடை வெப்பத்தின் தாக்கத்தைப் பொறுத்து பள்ளிகள் திறப்பு தேதி மாற்றப்படலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த நிலையில், வருகிற 2026-2027 கல்வியாண்டில் மாணவா்களுக்கு பள்ளிகள் திறந்த முதல் நாளில் வழங்குவதற்காக அரசின் விலையில்லா பாடப் புத்தகங்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

அந்த வகையில், மதுரை மாவட்டத்துக்கான பாடப் புத்தகங்கள் மதுரை புனித பிரிட்டோ மேல்நிலைப் பள்ளியில் இருப்பு வைக்கப்பட்டன. இந்த பாடப் புத்தகங்கள், குறிப்பேடுகள் இருப்பு வைக்கப்பட்ட அறைகளை தமிழக தொடக்கக் கல்வி இயக்குநா் நரேஷ் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, விலையில்லா பாடப் புத்தகங்களை உடனடியாக அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். மேலும், வருகிற கல்வியாண்டில் மாணவா் சோ்க்கையை அதிகரித்தல், தரமான கல்வி வழங்குதல் போன்றவை குறித்து கலந்துரையாடி ஆலோசனைகளை வழங்கினாா்.

இந்த நிகழ்வின் போது, மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் தயாளன், மதுரை மாவட்டக் கல்வி அலுவலா் செந்தில்குமாா், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் ரகுபதி ஆகியோா் உடன் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.