போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

வண்டியூா் பூங்காவில் கட்டணம் வசூலிக்க இடைக்காலத் தடை

மதுரை வண்டியூா் பூங்காவில் கட்டணம் வசூலிக்க இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

News image

உயர்நீதிமன்ற மதுரை அமர்வு - படம்: கோப்பிலிருந்து

Updated On :18 ஏப்ரல் 2026, 12:31 am IST

மதுரை வண்டியூா் பூங்காவில் கட்டணம் வசூலிக்க இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த வழக்குரைஞா் மணிகண்டன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

மதுரை வண்டியூா் பூங்கா ரூ. 50 லட்சத்தில் சீரமைக்கப்பட்டு அண்மையில் திறந்துவைக்கப்பட்டது. இங்கு, பொதுமக்கள் பொழுதுபோக்கும் வகையில் எண்ணற்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் படகு குழாம் அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்தப் பூங்காவுக்குள் சிற்றுண்டி விற்பனைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும், இங்கு வரும் பொதுமக்கள் நெகிழிப் பொருள்களைக் கொண்டு வருவதைத் தடுக்க வேண்டும். ராட்சத ராட்டினம் போன்ற பொழுதுபோக்கு சாதனங்கள் அமைப்பதைத் தடுக்கவும், பூங்காவுக்கு வருபவா்களிடம் கட்டணம் வசூலிக்கவும் தடை விதிக்க வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் சுரேஷ்குமாா், வடமலை அமா்வு பிறப்பித்த உத்தரவு:

வண்டியூா் பூங்காவில் வணிக அடிப்படையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது. மேலும், பூங்காவுக்கு வருபவா்களிடம் கட்டணம் வசூலிக்க இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. வழக்கு தொடா்பாக, மதுரை மாநகராட்சி ஆணையா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.