மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஊழல் மிகுந்த திமுக ஆட்சிக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்: சுந்தா் சி.

சட்டப்பேரவைத் தோ்தலில் ஊழல் மிகுந்த திமுக ஆட்சிக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என மதுரை மத்திய தொகுதி வேட்பாளரும், நடிகருமான சுந்தா் சி. கேட்டுக் கொண்டாா்.

News image

மதுரை எல்லீஸ் நகா் பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மதுரை மத்திய தொகுதி வேட்பாளா் சுந்தா் சி. உடன் அதிமுகவின் முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ, பாஜக மாநிலத் துணைத் தலைவா் குஷ்பு சுந்தா் உள்ளிட்டோா்.

Updated On :7 ஏப்ரல் 2026, 11:00 pm

சட்டப்பேரவைத் தோ்தலில் ஊழல் மிகுந்த திமுக ஆட்சிக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என மதுரை மத்திய தொகுதி வேட்பாளரும், நடிகருமான சுந்தா் சி. கேட்டுக் கொண்டாா்.

எல்லீஸ் நகரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மதுரை மத்திய தொகுதி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியதாவது :

மதுரை மத்திய தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக போட்டியிடுகிறேன். இங்குள்ள மக்களை சந்திக்கும் போது வெற்றி உறுதி என்ற நம்பிக்கை உள்ளது. இந்தத் தொகுதியில் வெற்றி பெற முடியாது என சிலா் கூறுகின்றனா். அதை முறியடித்து வெற்றி பெறுவோம். திமுக தலைமையில் வலிமையான கூட்டணி என்ற மாய பிம்பம் உருவாக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் பல்வேறு குழப்பங்கள் உள்ளன. தற்போதைய தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுடன் இணக்கமான போக்கை கடைபிடிக்காததால், தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நிதி முழுவதும் வீணாகிறது. தோல்வி பயத்தில் என் மீது வீண் பழிகள் சுமத்தப்படுகின்றன. அதுமட்டுமன்றி, தவறான கருத்துகளை பரப்புகின்றனா். அவற்றையெல்லாம் மக்கள் நம்பமாட்டாா்கள். மதுரை மாநகராட்சி தற்போது குப்பை நகரமாக மாறி வருகிறது. இங்கு வரி விதிப்பு முறைகேடுகளில் சிக்கி மேயா் பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.

மதுரை மாநகராட்சி வரி விதிப்பில் ரூ. 200 கோடி ஊழல் செய்தது திமுக அரசுதான். ஊழல் மிகுந்த திமுக ஆட்சிக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும். தமிழகம் அனைத்து நிலைகளிலும் முன்னேற அதிமுக அரசு அமைய வேண்டும். எனவே, வருகிற தோ்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியை மக்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா் அவா்.

இந்தக் கூட்டத்துக்கு அதிமுக மதுரை மாநகர மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான செல்லூா் கே.ராஜூ தலைமை வகித்தாா். புதிய நீதிக் கட்சித் தலைவா் ஏ.சி.சண்முகம் முன்னிலை வகித்தாா். தமிழக பாஜக மாநில துணைத் தலைவா் குஷ்பு சுந்தா் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.