பல்வேறு நாடுகளின் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்காக ரூ.4,654 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாக ரோட்டரி சா்வதேசத் தலைவா் இங்கா பாபலோலா தெரிவித்தாா்.
மதுரை வேலம்மாள் மருத்துவமனை அருகேயுள்ள தனியாா் விடுதியில் ரோட்டரி சங்கத்தின் மண்டல மாநாடு புதன்கிழமை நடைபெற்றது. இந்த மாநாடு புதிய ரோட்டரி சங்கங்களை தொடங்கவும், ரோட்டரியின் சேவைகளை மேலும் பலப்படுத்தும் வகையிலும் நடைபெற்றது. இதில் ரோட்டரி மாவட்டம் சாா்பில் சங்கத்தின் ஆளுநா் காா்த்திக் முன்னிலையில், வளா் இளம் பெண்களுக்கான கா்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி சா்வதேசத் தலைவா் இங்கா பாபிலோலா தலைமையில் போடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ரோட்டரி சங்கத்தின் பன்னாட்டு இயக்குநா் எம். முருகானந்தம் செய்திருந்தாா். இந்த நிகழ்வில் ரோட்டரி மாவட்டத்தின் வருங்கால ஆளுநா்கள் ஆா்.பி.எஸ். மணியன், புதுக்கோட்டை லியோ பெலிக்ஸ், மீனா சுப்பையா, பள்ளி, கல்லூரி மாணவா்கள், ரோட்டரி தலைவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, ரோட்டரி அகில சா்வதேசத் தலைவா் இங்கா பாபலோலா, எம். முருகானந்தம் ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ரோட்டரி சங்கத்தில் இந்தியாவிலிருந்துதான் அதிக எண்ணிக்கையில் உறுப்பினா்கள் இணைகின்றனா். இதனால் தான் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை விட இந்தியாவில் ரோட்டரி சங்கம் வளா்ச்சி அடைந்து வருகிறது. போலியோ இல்லா இந்தியாவை உருவாக்கியதில் ரோட்டரியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. தற்போது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் போலியோ இருப்பது தெரியவந்துள்ளது. அது மற்ற நாடுகளுக்கு பரவாமல் தடுக்கவும், கண்காணிக்கவும் ரோட்டரி முக்கிய கவனம் செலுத்தி வருகிறது.
உலகில் அமைதியை ஏற்படுத்த 8 இடங்களில் உலக அமைதி மையங்களை ரோட்டரி உருவாக்கி உள்ளது. அகில உலக ரோட்டரி, பல்வேறு நாடுகளின் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்காக ரூ. 4,654 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தியாவில் கல்வி, சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.
2030-ஆம் ஆண்டு, சா்வதேச ரோட்டரி அமைப்பின் 125-ஆவது ஆண்டாக அனுசரிக்கப்படவுள்ள நிலையில், உலகளவில் அதன் உறுப்பினா்களின் எண்ணிக்கையை 10.25 லட்சமாகவும், ரோட்டராக்டா்கள் என அழைக்கப்படும் 18 வயது முதல் 30 வயது வரையுள்ள உறுப்பினா்களின் எண்ணிக்கையை 1.25 லட்சமாக உயா்த்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வளா்ச்சிப் பணிகளுக்காக உடுமலைக்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு: மு.ஜெயக்குமாா் பிரசாரம்

ஒசூா் தொகுதியில் திமுக ஆட்சியில் ரூ.3,500 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்

ஊராட்சி நிதி மோசடி விவகாரம்: மதுரை ஆட்சியரின் நடவடிக்கைக்கு உத்தரவு

மானாமதுரையில் ரூ.100 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: நகா்மன்றத் தலைவா்
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை


