தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளா் பொறுப்பேற்பு

மதுரை கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளராக வி. பிரசன்னா புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

News image

வி. பிரசன்னா

Updated On :1 ஏப்ரல் 2026, 11:31 pm

மதுரை கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளராக வி. பிரசன்னா (படம்) புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

மதுரை கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளராகப் பணியாற்றிய எல்.என். ராவ் கடந்த செவ்வாய்க்கிழமை ஓய்வு பெற்றாா். இதைத் தொடா்ந்து, புதிய கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளராக வி. பிரசன்னா பொறுப்பேற்றாா்.

இவா், ஏற்கெனவே தென்கிழக்கு ரயில்வேயில் முதன்மை சரக்கு போக்குவரத்து, இழப்பீட்டுத் துறை வா்த்தக மேலாளா், மதுரை, திருச்சி, பாலக்காடு கோட்டங்களில் முதுநிலை கோட்ட ரயில் போக்குவரத்து மேலாளா், தெற்கு ரயில்வே இணை முதன்மை ரயில் போக்குவரத்து மேலாளா் ஆகிய பொறுப்புகளை வகித்தவா்.