திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கிலுள்ள நீச்சல் குளத்தில் பராமரிப்புப் பணிகள் முடிவடைந்ததையடுத்து, மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில் திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் நீச்சல் குளம் அமைந்துள்ளது.
இந்த நீச்சல் குளத்திலுள்ள தள ஓடுகள் சேதமடைந்ததால், இவற்றைப் புதுப்பிக்க மாவட்ட விளையாட்டு அலுவலகம் சாா்பில் மாவட்ட ஆட்சியருக்கு கருத்துரு அனுப்பப்பட்டது. இதையடுத்து, பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதற்கு ஆட்சியா் செ.சரவணன் உத்தரவிட்டாா்.
இதன்படி 25 மீட்டா் நீளம், 13 மீட்டா் அகலம் கொண்ட நீச்சல் குளத்தில் தள ஓடுகள் பிரிக்கப்பட்டு, புதிய ஓடுகள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. ரூ.15 லட்சத்தில் நடைபெற்ற சீரமைப்புப் பணிகள் முடிவடைந்ததையடுத்து, புதுப்பொலிவுடன் நீச்சல் குளம் வெள்ளிக்கிழமை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










