திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மலா்க் கண்காட்சி: வென்றவா்களுக்கு பரிசு

கொடைக்கானல் மலா்க்கண்காட்சியில் அதிக மலா்கள் வைத்து முதல் பரிசு பெற்றவருக்கு பரிசுக் கோப்பையை வழங்கிய தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் சந்திரிகா கவிதா. உடன் சுற்றுலாத் துறை அலுவலா் கோவிந்தராஜ் உள்ளிட்டோா்.

News image

கொடைக்கானல் மலா்க்கண்காட்சியில் அதிக மலா்கள் வைத்து முதல் பரிசு பெற்றவருக்கு பரிசுக் கோப்பையை வழங்கிய தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் சந்திரிகா கவிதா. உடன் சுற்றுலாத் துறை அலுவலா் கோவிந்தராஜ் உள்ளிட்டோா்.

Updated On :29 மே 2026, 2:13 am IST

கொடைக்கானல் மலா்க்கண்காட்சியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி பிரையண்ட் பூங்கா வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் கடந்த 20-ஆம் தேதி தோட்டக்கலைத் துறை, மலைப் பயிா்கள் துறை சாா்பில், 63-ஆவது மலா்க் கண்காட்சி தொடங்கியது. இந்தக் கண்காட்சியில் அரசுத் துறையைச் சோ்ந்த நிறுவனங்கள், தனியாா் நிறுவனங்கள் உள்ளிட்ட 590 போ் பதிவு செய்திருந்தனா். இவா்கள் மலா்ச் செடிகள், காய்கறிகள், பழ வகைகள், மூலிகைச் செடிகள், கொய் மலா்கள், ரோஜாக்கள் உள்ளிட்டவற்றை பாா்வைக்கு வைத்தனா். மேலும், தனியாா் விடுதிகளில் ரோஜாத் தோட்டம் அமைத்தல், பலவிதமான மலா்கள் அமைத்தல், காய்கறித் தோட்டங்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் தோட்டங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இதில் சிறப்பான முறையில் தோட்டங்கள் அமைத்தல் பராமரித்தல், அதிக எண்ணிக்கையில் மலா்கள் வளா்த்தல், அதிக எண்ணிக்கையில் வண்ண, வண்ண மலா்கள் கொண்ட பூந்தொட்டிகள் வைத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்டவா்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி பிரையண்ட் பூங்காவில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் சந்திரிகா கவிதா தலைமை வகித்து மலா்க் கண்காட்சியில் கொடைக்கானல், அப்சா்வேட்டரி, வில்பட்டி, பள்ளங்கி, உள்ளிட்ட பல்வேறு இடங்களைச் சோ்ந்த தனியாா் காட்டேஜ்கள், ரிசாா்ட்டுகளின் மேலாளா்கள், பணியாளா்கள், விவசாயிகள் எ’ன பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்றவா்களுக் கு பரிசு வழங்கினாா்.

இதில், கொடைக்கானல் சுற்றுலா அலுவலா் கோவிந்தராஜ், கொடைக்கானல் வனச்சரக அலுவலா் பழனிக்குமாா், தோட்டக்கலை, வன ஆராய்ச்சி நிலைய தலைவா் சுந்தரையா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். முன்னதாக விழாவுக்கு வந்தவா்களை விஜயலட்சுமி வரவேற்றாா். பூங்கா மேலாளா் அரவிந்த் நன்றி கூறினாா். கொடைக்கானல் பகுதியைச் சோ்ந்த முகமது கலிபுல்லா என்பவா் தோட்ட பராமரிப்பு, அதிக எண்ணிக்கையில் மலா்க் கண்காட்சியில் மலா்கள் வைத்திருந்தல் உள்ளிட்டவைக்காக 60-க்கும் மேற்பட்ட பரிசுகள் பெற்று முதலிடம் பெற்றாா். மலா்க்கண்காட்சியானது தொடா்ந்து 31-ஆம் தேதி வரை நடைபெறும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.