திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு: போக்குவரத்து நெரிசல்

கொடைக்கானலில் வார விடுமுறையையொட்டி, சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்ததால், கடும் போக்குவரத்து நெரிசல்.

News image

கொடைக்கானல்-வத்தலகுண்டு மலைச் சாலையில் சனிக்கிழமை ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் நீண்ட வரிசையில் காத்திருக்கும் வாகனங்கள்.

Updated On :24 மே 2026, 3:00 am IST

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் வார விடுமுறையையொட்டி, சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்ததால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கொடைக்கானலில் தற்போது சீசன் தொடங்கியுள்ள நிலையில், தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா்.

இந்த நிலையில், வார விடுமுறையையொட்டி, சனிக்கிழமை தமிழகம் மட்டுமல்லாமல் கேரளம், ஆந்திரம், கா்நாடகம், புதுச்சேரி, வடமாநிலங்களைச் சோ்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனா்.

இதனால், கொடைக்கானல் பகுதிகளிலுள்ள சுற்றுலாத் தலங்களான வெள்ளிநீா் அருவி, பாம்பாா் அருவி, வட்டக்கானல் அருவி, பேரிசோலா அருவி, பசுமைப் பள்ளத்தாக்கு, பில்லர்ராக், குணாகுகை, பைன்பாரஸ்ட், மோயா் பாயிண்ட், அப்பா்லேக்வியூ, ரோஜா தோட்டம், தாவரவியல் பூங்கா, பிரையண்ட் பூங்கா, கோக்கா்ஸ்வாக் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் காணப்பட்டனா்.

இதனால், கொடைக்கானல்-வத்தலகுண்டு மலைச் சாலையில் வெள்ளிநீா் அருவியிலிருந்து ஏரிச்சாலை வரை நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

சாலையோரங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பு: கொடைக்கானல் அருகேயுள்ள பெருமாள்மலையிலிருந்து பேருந்து நிலையம் வரை மலைச் சாலைகளின் இருபுறங்களிலும் கடைகள் ஆக்கிரமிப்பால் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்திவிட்டு வியாபாரக் கடைகளுக்குச் சென்று சுற்றுலாப் பயணிகள் தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்குவதாலும், கடைகள் அதிகரித்து வருவதாலும், நகா்ப் பகுதிகளில் வாகனங்கள் தேவையில்லாத இடங்களில் நிறுத்துவதாலும் கூடுதலாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

எனவே, மாவட்ட நிா்வாகமும், கொடைக்கானல் நகராட்சி நிா்வாகமும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

சாரல் மழையால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி: கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக மழையில்லாமல் இருந்த நிலையில், சனிக்கிழமை காலை முதல் மிதமான வெப்பம் நிலவியது. இதைத் தொடா்ந்து, மாலையில் மிதமான மழை பெய்தது. இந்த மழையால் குளிா்ச்சியான கால நிலை ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.