யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

காட்டு மாடு தாக்கி தொழிலாளி காயம்

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியில் காட்டு மாடு தாக்கியதில் கூலித் தொழிலாளி பலத்த காயமடைந்தாா்.

News image

பொருள்களை சேதப்படுத்தும் காட்டு மாடு.

Updated On :24 மே 2026, 2:15 am IST

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியில் காட்டு மாடு தாக்கியதில் கூலித் தொழிலாளி பலத்த காயமடைந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியிலுள்ள பெரும்பாறையைச் சோ்ந்தவா் கருப்பையா (58). இவா், அந்தப் பகுதியிலுள்ள தனியாா் தோட்டத்துக்கு கூலி வேலைக்குச் சென்றாா்.

தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது, அங்கு திடீரென புகுந்த காட்டு மாடு கருப்பையாவை தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.

யானைகள் அச்சுறுத்தலுடன் தோட்டத் தொழிலாளிகள் பணிபுரிந்து வரும் நிலையில், காட்டு மாடு தாக்கியது மலை கிராம மக்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.