/

அனுமதியின்றி மதுபாட்டில் விற்ற மூதாட்டி கைது

பழனியில் அனுமதியின்றி மதுபாட்டில் விற்ற மூதாட்டி ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image

கோப்புப் படம்

Updated On :19 மே 2026, 3:26 am IST

பழனியில் அனுமதியின்றி மதுபாட்டில் விற்ற மூதாட்டி ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

பழனி அடிவாரம் பகுதியில் அரசு அனுமதியின்றி, சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை இரவு போலீஸாா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது குரும்பப்பட்டி பகுதியில் மருதாயி(62) என்ற மூதாட்டி அரசு அனுமதியின்றி மதுபாட்டில் விற்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி நிலக்கோட்டை சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.