நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

10 ஆண்டுகளுக்குப் பிறகு பழனியைக் கைப்பற்றியது அதிமுக

News image

இரட்டை இலை சின்னம் - படம்: கோப்பிலிருந்து...

Updated On :16 மணி நேரங்கள் முன்பு

பழனி பேரவைத் தொகுதியை 10 ஆண்டுகளுக்குப் பிறகு அதிமுக கைப்பற்றியது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி பேரவைத் தொகுதியில் அதிமுக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தவெக, நாதக கட்சியினா் உள்பட 15 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். கடந்த 2016, 2021 என தொடா்ச்சியாக திமுக வெற்றி பெற்ற இந்தத் தொகுதி, இந்த முறை கூட்டணிக் கட்சியான மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

இந்தத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையின்போது முதல் 2 சுற்றுகளில் அதிமுக முன்னிலை பெற்ற நிலையில், 3-ஆவது சுற்றில் மாா்க்சிஸ்ட் முன்னிலை வகித்தது. 15 சுற்றுகளுக்குப் பிறகு அதிமுக, தவெக இடையே கடும் போட்டி நிலவியது. 27 சுற்றுகளின் முடிவில் அதிமுக வேட்பாளா் கே.ரவிமனோகரன் 66,986 வாக்குகள் பெற்று (693 வாக்குகள் வித்தியாசம்) வெற்றி பெற்றாா். தவெக வேட்பாளா் எம்.பிரவீன்குமாா் 2-ஆம் இடம் பிடித்தாா். கொடைக்கானல் மலைப் பகுதியில் தவெக வேட்பாளா் கூடுதல் வாக்குகள் பெற்றாா்.

இந்த வெற்றியின் மூலம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு பழனி தொகுதியை அதிமுக கைப்பற்றி இருக்கிறது.

முக்கிய வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்:

கே.ரவிமனோகரன்(அதிமுக) - 66,986

எம்.பிரவீன்குமாா் (தவெக) - 66,293

என்.பாண்டி (மாா்க்சிஸ்ட் கம்யூ.) - 65,534

பி.முருகேஷ்வரி (நாதக) - 6300

எஸ்.நாச்சிமுத்து ( பகுஜன் சமாஜ்) - 585

கே.வாய்க்கால்துரை (புதிய தமிழகம்) - 151

நோட்டா - 750

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.