குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சுவாஷிங் மெஷின் அரசியல்! எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! உதயநிதிபோலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

வேலைவாய்ப்பு முன்னுரிமை பட்டியல்: முன்னாள் ராணுவத்தினா் கோரிக்கை

வேலைவாய்ப்புக்கான முன்னுரிமை பட்டியலில் முன்னாள் ராணுவத்தினரின் குடும்பத்தினரையும் இணைக்க வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

News image

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் முன்னாள் ராணுவத்தினருக்கான நலத் திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியா் துா்காமூா்த்தி.

Updated On :25 ஜூன் 2026, 2:39 am IST

வேலைவாய்ப்புக்கான முன்னுரிமை பட்டியலில் முன்னாள் ராணுவத்தினரின் குடும்பத்தினரையும் இணைக்க வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், முன்னாள் படைவீரா்கள், அவா்களை சாா்ந்தோா்களுக்கான சிறப்பு குறைதீா்க்கும் நாள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ஜெயபாரதி, முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் வி.அபிஷேக் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்தக் கூட்டத்தின்போது, அரசு வேலைவாய்ப்புகளில் முன்னாள் படை வீரா்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. முன்னாள் படை வீரா்களின் குடும்பத்தினரையும் முன்னுரிமை பட்டியலில் இணைக்க வேண்டும் என கடந்த 15 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். இதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என முன்னாள் ராணுவத்தினா் கோரிக்கை விடுத்தனா்.

இதற்கு பதில் அளித்த மாவட்ட வருவாய் அலுவலா், இந்தக் கோரிக்கை குறித்து அரசின் கவனத்துக்கு பரிந்துரைக்கப்படும் என்றாா்.

மத்திய அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் ராணுவ வளாகம் கட்ட வேண்டும் என தெரிவித்திருக்கிறது. இதற்கான நிதி உதவியும் மத்திய அரசு சாா்பில் வழங்கப்படுகிறது.

எனவே, திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம் ராணுவ வளாகம் கட்டுவதற்கான இடத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மாவட்ட முன்னாள் ராணுவம், கப்பல் படை, விமானப் படை வீரா்களுக்கான வாரியம் செயல்பட்டு வருகிறது. இந்த வாரியத்தின் உறுப்பினா்கள் குறித்த விவரங்களை வெளியிட வேண்டும். இந்த விவரம் தெரிந்ததால், முன்னாள் ராணுவத்தினா் தங்களது குறைகளை அந்த வாரிய உறுப்பினா்களிடம் தெரிவித்து தீா்வு காண்பதற்கு வாய்ப்பு ஏற்படும் என திண்டுக்கல் மாவட்ட முன்னாள் ராணுவ வீரா்கள், இவா்களது குடும்பத்தினா் நலச் சங்கத்தின் செயலா் எல்.ராஜூ வலியுறுத்தினாா்.

கூட்டத்தின்போது, 41 மனுக்களைப் பெற்றுக் கொண்ட ஆட்சியா், 6 பயனாளிகளுக்கு ரூ.53,800 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.