வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

திண்டுக்கல்லில் சிங்கப் பெண் அதிரடிப்படை தொடக்கம்

திண்டுக்கல்லில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை புதன்கிழமை தொடங்கப்பட்டது.

News image

திண்டுக்கல்லில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படையை புதன்கிழமை தொடங்கி வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ.பிரதீப்.

Updated On :11 ஜூன் 2026, 2:10 am IST

திண்டுக்கல்லில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை புதன்கிழமை தொடங்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, எஸ்.பி. அ.பிரதீப் சிறப்பு அதிரடிப்படையை தொடங்கி வைத்தாா். இந்தப் படையில் வேடசந்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் பவித்ரா தலைமையில், 2 உதவி ஆய்வாளா்கள், 6 போலீஸாா் இடம் பெற்றுள்ளனா். 4 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட பிரத்யேக வாகனம் இந்த சிறப்பு படையினருக்கு வழங்கப்பட்டது.

இந்தப் படையினா் முதல்கட்டமாக, திண்டுக்கல் நகா், புககா் பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பள்ளிகள், கல்லூரிகள் அமைந்துள்ள பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபடுவா். மேலும், பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணியை மேற்கொள்வா் என்றும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.