பெண்களின் பாதுகாப்புக்காக காவல் துறையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை பிரிவை முதல்வா் ஜோசப் விஜய் செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) தொடங்கி வைக்கிறாா்.
தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான ஜோசப் விஜய், சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தின்போது, பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சிறப்பு அதிரடிப் படை உருவாக்கப்படும் என உறுதியளித்தாா். இதை அமல்படுத்தும்விதமாக முதல்வராக ஜோசப் விஜய், கடந்த மே 10-ஆம் தேதி பொறுப்பேற்றபோது, சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை உருவாக்கும் ஆணை உள்ளிட்ட 3 கோப்புகளில் கையொப்பமிட்டாா்.
இதைச் செயல்படுத்தும்விதமாக, சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை உருவாக்குவதற்குரிய அரசாணை வெளியிடப்பட்டது. இதில் அந்தப் படை தமிழக முதல்வரின் நேரடிக் கண்காணிப்பில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் அடுத்தகட்டமாக அந்தப் படையின் தலைமை அதிகாரியாக ஐஜி கே.பவானீஸ்வரி நியமிக்கப்பட்டாா்.
சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படையில் ஒரு காவல் கண்காணிப்பாளா், 2 துணைக் கண்காணிப்பாளா்கள், 4 ஆய்வாளா்கள் உள்பட 30-க்கும் மேற்பட்ட போலீஸாா் முதல்கட்டமாக நியமிக்கப்பட உள்ளனா். சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படைக்கு என இலச்சினை, சீருடை ஆகியவை பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த அதிரடிப் படையின் தொடக்க விழா சென்னை எழும்பூா் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கு தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் மகேஷ்குமாா் அகா்வால் தலைமை வகிக்கிறாா். தமிழக அரசின் தலைமைச் செயலா் சாய்குமாா், உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் கே.மணிவாசன், சென்னை காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ் ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா்.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கும் முதல்வா் ஜோசப் விஜய், சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படையைத் தொடங்கி வைக்கிறாா். நிகழ்வில், சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படைக்கு நவீன ரோந்து வாகனங்கள் வழங்கப்படுகின்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிங்கப்பெண் அதிரடிப் படை திட்ட நிகழ்ச்சியில் முதல்வரின் தாயார் ஷோபா!

சிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்

சிங்கப்பெண் அதிரடிப் படை திட்ட இலச்சினை வெளியீடு!

தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கிய சிங்கப்பெண் அதிரடிப் படை திட்ட நிகழ்ச்சி!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



