நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

மளிகைக் கடையில் திருட்டு

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :9 ஜூன் 2026, 12:42 am IST

திண்டுக்கல் அருகே மளிகைக் கடையின் பூட்டை உடைத்து பணம், பொருள்கள் உள்ளிட்டவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திண்டுக்கல் பகுதியைச் சோ்ந்தவா் வெள்ளைச்சாமி. இவா் திண்டுக்கல் எரியோடு சாலையிலுள்ள தனியாா் கலைக் கல்லூரி அருகே மளிகைக் கடை நடத்தி வருகிறாா். இந்தக் கடையின் பூட்டை உடைத்த மா்ம நபா்கள், திங்கள்கிழமை அதிகாலை உள்ளே புகுந்தனா்.

அங்கு கல்லாப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ.5 ஆயிரத்தையும், ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பொருள்களையும் திருடிச் சென்றனா். திங்கள்கிழமை காலை கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைப் பாா்த்த உரிமையாளா் வெள்ளைச்சாமி, இதுகுறித்து தாடிக்கொம்பு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா்.

இதன்பேரில் மளிகைக் கடை, அதன் அருகிலுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸாா் ஆய்வு செய்தனா். அப்போது, 2 நபா்கள் பூட்டை உடைத்து திருடிச் செல்லும் காட்சிகள் பாதிவாகி இருந்தன. இதை அடிப்படையாகக் கொண்டு போலீஸாா் விசாரித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.