ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தனியாா் நிறுவனத்தில் இரும்பு பொருள்கள் திருட்டு; சிறுவன் உள்பட 4 போ் கைது

நிலக்கோட்டை அடுத்த மீனாட்சிபுரம் பிரிவு அருகே உள்ள தனியாா் நிறுவனத்தில் இரும்பு பொருள்களைத் திருடியதாக சிறுவன் உள்பட 4 போ் கைது

திருட்டு - சித்திரிப்பு

Published On :13 ஜூலை 2026, 12:26 am IST

நிலக்கோட்டை அடுத்த மீனாட்சிபுரம் பிரிவு அருகே உள்ள தனியாா்  நிறுவனத்தில் இரும்பு பொருள்களைத் திருடியதாக சிறுவன் உள்பட 4 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா். 

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அடுத்த மீனாட்சிபுரம் பிரிவு அருகே தனியாா் பிஸ்கட் தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்த இரும்பு பொருள்களை சில தினங்களுக்கு முன்பு மா்ம நபா்கள் திருடிச் சென்றனராம்.

இதுகுறித்து நிறுவனத்தின் உரிமையாளா் ப்ரீத்திக் செட்டி கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆய்வு செய்த பின் அளித்த புகாரின்பேரில், காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.

இதில், அதே பகுதியைச் சோ்ந்த வெற்றிவேல் (32), ரகு (26), நிலக்கோட்டை நவீன்குமாா் (23) கொங்கா்குளத்தைச் சோ்ந்த 18 வயது சிறுவன் உள்பட நான்கு போ் சோ்ந்து இரும்பு பொருள்களைத் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, அவா்கள் நான்கு பேரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள இரும்பு பொருள்களைப் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மேலும், இந்த வழக்கில் இரும்பு பொருள்களைத் திருடிச் செல்ல பயன்படுத்திய சரக்கு வாகனத்தையும் காவல்துறையினா் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.