ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மத்திய அரசின் இரும்பு ஆலை நிறுவனத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

'எக்ஸிகியூட்டிவ் டிரெய்னி' பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்து...

NMDC Limited Recruitment 2026

மத்திய அரசின் இரும்பு ஆலை நிறுவனத்தில் வேலை - NMDC

Published On :10 ஆகஸ்ட் 2026, 2:39 pm IST

மத்திய அரசின் எஃகு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஒரு அரசு நிறுவனம் என்எம்டிசி இரும்பு ஆலை நிறுவனம். இந்த நிறுவனத்தின் பங்குகள் பிஎஸ்இ, என்எஸ்இ மற்றும் கல்கத்தா பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்நிறுவனம் சுமார் ரூ. 24,000 கோடி செலவில் சத்தீஸ்கரின் நகர்னாரில் அதிநவீன வசதிகளுடன் கூடிய 3.0 எம்டிபிஏ திறன் கொண்ட இரும்பு ஆலையைச் சொந்தமாக இயக்கி வருகிறது.

மேம்பட்ட தொழில்நுட்ப வலிமையைக் கொண்டுள்ள இந்த இரும்பு ஆலை, பல்வேறு முக்கிய நுகர்வுத் துறைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான உயர்தர 'ஹாட் ரோல்டு' இரும்பு தயாரிப்புகளை வழங்குவதன் மூலம், இந்த சந்தையில் தனது முத்திரையைப் பதிக்கத் தயாராகி வருகிறது.

இந்த நிறுவனம் ஊழியர்களின் புதிய யோசனைகளை ஊக்குவிப்பதோடு, முன்னெடுப்புகளையும் பாராட்டுகிறது. செயல்பாடுகள் மற்றும் இலக்குகளுக்கு இடையே சமநிலையைப் பேணவும், தங்களுக்கு அளிக்கப்பட்ட பணிகளை முழுப் பொறுப்புணர்வுடன் மேற்கொள்ளவும் ஊழியர்களை ஊக்குவித்து வருகிறது.

இந்த நிறுவனத்தில் பணிபுரிவது ஒரு பாதுகாப்பான உணர்வை அளிப்பதோடு, சக ஊழியர்கள் மற்றும் இத்துறையினரிடமிருந்து உரிய மரியாதையையும் அங்கீகாரத்தையும் பெற்றுத் தருகிறது.

இந்த நிலையில், இந்த நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளில் 'எக்ஸிகியூட்டிவ் டிரெய்னி' பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு இளமையும், உழைப்பும் மற்றும் சிறந்த எதிர்காலத் திறன் கொண்ட இளைஞர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அது குறித்து இங்கு பார்ப்போம்...

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: 05 / 2026

மொத்த காலியிடங்கள்: 102

பணி: Executive Trainee

பிரிவு: Ceramics - 3

தகுதி: பொறியியல் துறையில் செராமிக் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பிரிவு: Chemical - 4

தகுதி: பொறியியல் துறையில் கெமிக்கல் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பிரிவு: Civil - 3

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பிரிவு: Computer & Information Technology - 3

தகுதி: பொறியியல் துறையில் கணினி மற்றும் தகவல்தொழில்நுட்பம் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண் டும்.

பிரிவு: Electrical

காலியிடங்கள்: 22

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பிரிவு: Finance

காலியிடங்கள்: 7

தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் சிஏ, ஐசிடபுள்யுஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் நிதியியல் பிரிவில் எம்பிஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பிரிவு: Human Resource

காலியிடங்கள்: 3

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் சமூகவியல், சமூகப் பணி, தொழிலாளர் நலன், பணியாளர் மேலாண்மை போன்ற பாடப்பிரிவில் எம்பிஏ, முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பிரிவு: Instrumentation

காலியிடங்கள்: 2

கல்வித்தகுதி: பொறியியல் துறையில் இன்ஸ்ட்ருமென்டேஷன், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், எலக்ட்ரிக்கல் போன்ற ஏதாவதொரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பிரிவு: Mechanical

காலியிடங்கள்: 51

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பிரிவு: Metallurgy

காலியிடங்கள்: 3

தகுதி: பொறியியல் துறையில் மெட்டாலர்ஜி பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: மேற்கண்ட பணிகளுக்கு வயதுவரம்பு11.8.2026 தேதியின்படி 27-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டிபிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.

சம்பளம்: மாதம் ரூ. 60,000 - 1,80,000

தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழித் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு கட்டணம் செலுத்தவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.nsltd.in/en/careers என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 11.8.2026 .

விண்ணப்பிப்போரின் கூடுதல் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Summary

Recruitment of Executive Trainees in various disciplines for Operation and Maintenance of NSL, Nagarnar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.