ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவன பணியிடங்களுக்கு உடனே விண்ணப்பிக்கவும்!

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவன பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக...

HPCL Recruitment 2026

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் - HPCL

Published On :20 ஜூலை 2026, 2:39 pm IST

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் 116 இளநிலை எக்ஸிகியூட்டிவ், உதவி மேலாளர், துணை பொது மேலாளர், பொது மேலாளர் மற்றும் முதன்மை பொது மேலாளர் ஆகிய பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் டிப்ளமோ, பிஇ முடித்த ஆர்வம் உள்ளவர்களிடம் இருந்து இன்றைக்குள்(ஜூலை 20) ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுபற்றிய விபரம் வருமாறு:

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: HPCL/OPEN/HR/1/2026-27

பணி: Junior Executive (Chemical)

காலியிடங்கள்: 37

தகுதி: பொறியியல் துறையில் கெமிக்கல் பிரிவில் 3 ஆண்டு முழுநேர டிப்ளமோ படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.30,000 - 1,20,000

வயதுவரம்பு: 25-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Junior Executive

காலியிடங்கள்: 17

சம்பளம்: மாதம் ரூ.30,000 - 1,20,00

தகுதி: ஏதாவதொரு துறையில் பி.எஸ்சி முடித்திருப்பதுடன் Fire & Safety பாடத்தில் டிப்ளமோ முடித்து கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 25-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Senior Officer (Sales)

காலியிடங்கள்: 52

தகுதி: பொறியியல் துறையில் Mechanical, Civil, Electrical, Instrumentation,Chemical பிரிவில் பிஇ, பி.டெக் முடித்து எம்பிஏ அல்லது பிஜிடிஎம் முடித்திருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.60,000 - 1,80,000

வயது வரம்பு: 29-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Assistant Manager(Projects)

காலியிடங்கள்: 5

சம்பளம்: மாதம் ரூ.70,000 -2,00,000

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பிஇ முடித்திருக்க வேண்டும். மேலும் 6 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 31-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Manager(Projects)

காலியிடங்கள்: 5

சம்பளம்: மாதம் ரூ. 80,000 - 2,20,000

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பிஇ முடித்திருக்க வேண்டும். மேலும் 9 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 34-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழித் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வில் ஆங்கிலம், பொது அறிவு மற்றும் முக்கிய பாடப்பிரிவுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். கணினி வழித்தேர்வு ஆகஸ்ட், செப்டம்பர் மாதம் நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. இதனை ஆன் ன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை: https://www.hindustan petroleum.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 20.7.2026

விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Summary

Hindustan Petroleum Corporation Limited invites online recruitment applications through HPCL website...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.