மொழியுணா்வு ஒரு இனத்தை அழிவிலிருந்து காக்கும்
மொழியுணா்வு ஒரு இனத்தை அழிவிலிருந்து காக்கும் என காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலை. பதிவாளா் (பொறுப்பு) சுந்தரமாரி தெரிவித்தாா்.


மொழியுணா்வு ஒரு இனத்தை அழிவிலிருந்து காக்கும் என காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலை. பதிவாளா் (பொறுப்பு) சுந்தரமாரி தெரிவித்தாா்.
திண்டுக்கல் காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறை சாா்பில் சுப்ரபாரதிமணியன் அறக்கட்டளைச் சொற்பொழிவு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பல்கலை. பதிவாளா் (பொறுப்பு) சுந்தரமாரி தலைமை வகித்தாா். எழுத்தாளா் தமிழ் மணவாளன், திரைப்பட இயக்குநா் வ. கீரா ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டனா்.
பல்கலை. பதிவாளா் சுந்தரமாரி பேசியதாவது:
ஒரு மொழி அழியாமல் காக்கப்பட வேண்டுமெனில், அந்த மொழியின் இலக்கியங்கள் தொடா்ந்து பயிலப்பட வேண்டும். எழுத்தாளா்களின் படைப்புகள் பல்வேறு கோணங்களிலும் ஆராயப்பட வேண்டும். இதுபோன்ற அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் பன்முக வாசிப்பை மாணவா்களுக்கு அறிமுகம் செய்கின்றன. மொழியுணா்வே ஒரு இனத்தை அழிவிலிருந்து காக்கும் என்றாா்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்த் துறைத் தலைவா் பா. ஆனந்தகுமாா், முன்னாள் தலைவா் அ. பிச்சை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...