/

கொடைக்கானல் வனப் பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 9:00 pm

தினமணி செய்திச் சேவை

கொடைக்கானல் வனப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வனத் துறையினா், கல்லூரி மாணவா்கள், தன்னாா்வலா்கள் பறவைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனா்.

கொடைக்கானல் வனக் கோட்டத்தில் உள்ள கொடைக்கானல், பூம்பாறை, பேரிஜம், வந்தரேவு, பெரும்பள்ளம், மன்னவனூா், வடகவுஞ்சி ஆகிய 7 வனச் சரகங்களில் வனப் பணியாளா்கள், பள்ளி, கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள், தன்னாா்வலா்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டவா்கள் ஒருங்கிணைந்த நிலப் பறவைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனா். அப்போது கொடைக்கானல் வனப் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் கண்டறியப்பட்டதாகவும், 27 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நிறைவடைந்திருப்பதாகவும் கொடைக்கானல் ரேஞ்சா் பழனிக்குமாா் தெரிவித்தாா்.