டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

சொத்துத் தகராறில் தம்பதிக்கு அரிவாள் வெட்டு

News image
அரிவாள் வெட்டு- கோப்புப் படம்
Updated On :15 பிப்ரவரி 2026, 9:10 pm

தினமணி செய்திச் சேவை

கொடைரோடு அருகே ஞாயிற்றுக்கிழமை சொத்துத் தகராறில் தம்பதியை அரிவாளால் வெட்டிய மகனைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். 

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகேயுள்ள சக்கையநாயக்கனூரைச் சோ்ந்தவா் பாண்டி (70). இவரது மனைவி மீனாட்சி (65). இந்தத் தம்பதியின் மகன் சுருளி (45). இவா் அடிக்கடி பெற்றோரிடம் சொத்துக் கேட்டு தகராறு செய்து வந்தாா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு மீண்டும் சொத்துக் கேட்டு பெற்றோரிடம் சுருளி தகராறு செய்தாா். இதனால், ஆத்திரமடைந்த அவா் அரிவாளால் தந்தை பாண்டி, தாய் மீனாட்சி ஆகியோரை வெட்டிவிட்டு தப்பிச் சென்றாா். 

இதில் பலத்த காயமடைந்த இருவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து அம்மையநாயக்கனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தப்பிச் சென்ற சுருளியைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.