

கொடைரோடு அருகே செவ்வாய்க்கிழமை இளைஞா் அரிவாளால் வெட்டப்பட்டாா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகேயுள்ள மாவுத்தம்பட்டியைச் சோ்ந்தவா் பாலமுருகன் (35). விவசாயியான இவா், சடையாண்டிபுரம் பகுதியில் தோட்டத்து வீட்டில் குடியிருந்து வருகிறாா்.
இவா் சடையாண்டிபுரத்திலிருந்து கொடைரோட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா். அருகம்பட்டி ஓடை புதா் பகுதியில் 3 போ் அவரை அரிவாள், கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினா்.
தகவல் அறிந்து சென்ற அம்மையநாயக்கனூா் காவல் துறையினா் பாலமுருகனை மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இந்த சம்பவம் குறித்து,காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து, அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு, தப்பி ஓடிய மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.
டிரெண்டிங்

சொத்துத் தகராறில் தம்பதிக்கு அரிவாள் வெட்டு
வியாபாரிக்கு அரிவாள் வெட்டு: இருவா் கைது

ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு

முன்விரோதத்தால் இருவருக்கு அரிவாள் வெட்டு
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

