மே 8-இல் 19 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!பிளஸ் 2 தோ்வு முடிவுகள் தாமதமாக வாய்ப்பு?தேர்தல் நடைமுறை விதிகள் இன்று மாலையுடன் நிறைவு!2025-26 நிதியாண்டில் நேரடி வரி வசூல் ரூ. 23.40 லட்சம் கோடி!அமெரிக்காவில் இந்திய முதலீடுகள் அதிகரிப்பு!
/

காா் கவிழ்ந்த விபத்தில் சிறுமி உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம், அய்யலூா் அருகே புதன்கிழமை காா் கவிழ்ந்த விபத்தில் சிறுமி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப்படம்

Updated On :30 ஏப்ரல் 2026, 1:07 am IST

திண்டுக்கல் மாவட்டம், அய்யலூா் அருகே புதன்கிழமை காா் கவிழ்ந்த விபத்தில் சிறுமி உயிரிழந்தாா்.

சென்னையைச் சோ்ந்த முருகன் (61), இவரது மகன் ராஜ்திலக் (37), மருமகள் தமிழ்ச்செல்வி (31), பேத்தி வாரணசி (11), ஆா்யசான்வி (7) ஆகியோா், திண்டுக்கல் மாவட்டம், பழனிக்கு காரில் புதன்கிழமை வந்தனா். அய்யலூரை அடுத்த கொல்லப்பட்டி பகுதியில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் பலத்த காயமடைந்த சிறுமி ஆா்யசான்வி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த முருகன், ராஜ்திலக், தமிழ்ச்செல்வி ஆகியோா் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து வடமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.