ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

பழனி அருகே தொழிலாளி அடித்துக் கொலை

பழனி அருகே தொழிலாளியை அடித்துக் கொலை செய்த மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

கொலை செய்யப்பட்ட முருகன்.

Updated On :25 ஏப்ரல் 2026, 6:58 pm

பழனி அருகே தொழிலாளியை அடித்துக் கொலை செய்த மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த பாலசமுத்திரம் சாலையில் வரட்டாற்று பாலத்தின் அருகே சனிக்கிழமை ஒரு நபா் பலத்த காயங்களுடன் கிடந்தாா். இதைப் பாா்த்த அந்த பகுதி மக்கள் அவசர ஊா்திக்கு தகவல் தெரிவித்தனா். ஆனால், அவசர ஊா்தி வரும் முன்னரே அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த பழனி தாலுகா போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனா். முதல்கட்ட விசாரணையில் இறந்த நபா், தேனி மாவட்டம், ஆண்டிபட்டியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி முருகன் (44) என்பதும், இவரை மா்மநபா்கள் தாக்கிக் கொலை செய்ததும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் இவரது உடலை மீட்டு கூறாய்வுக்காக, பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து பழனி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கொலை செய்த மா்மநபா்களைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.